Header Ads



செய்த துரோகத்திற்காக, பகிரங்க மன்னிப்புக் கேட்க தயார் - திஸ்ஸ அத்தநாயக்க


ஐ.தே.க. வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , அக்கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு தொடர்ச்சியாக தூது விட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் கட்சியில் தான் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் தான் செய்த துரோகம் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்கவும் தயாராகவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக மல்வத்துபீடம் மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் ஊடாகவும் பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தங்களை கொடுக்கும் முயற்சிகளையும் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கொண்டுள்ளார்.

பெரும்பாலும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கண்டி மாநகர சபை மேயர் பதவிக்குப் போட்டியிடுவது திஸ்ஸவின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

4 comments:

  1. துரோகி யை உள்வாங்கக் கூடாது

    ReplyDelete
  2. வெக்கம்கெட்ட அரசியல்வாதிகள். இவர்கள் சோறு சாப்பிட்டு வழர்ந்தவர்களா? அல்லது நாய் , பன்றியைப்போல் வேறேதும் சாப்பிட்டு வளர்ந்தார்களா?

    ReplyDelete
  3. இத பிச்சை எடுப்பது மேல்

    ReplyDelete
  4. மேலே ஒருவன் சலவை கடை திறக்கும் வேலையில் மும்முறமாக இறங்கிவிட்டார்,அதுக்கு பக்கத்தில் இவர் ஒரு சலூன் கடை திறந்தால் Busnessபிச்சி போகும்

    ReplyDelete

Powered by Blogger.