Header Ads



பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்தவர்களின், உறுப்புரிமையை ரத்துசெய்ய மைத்திரியிடம் கோரிக்கை

பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சில பாராளுமன்ற அமர்வுகளில் உரிய முறையில் பங்கேற்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான உறுப்பினர்களின் உரிப்புரிமையை ரத்து செய்ய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காது உறுப்பினர்களினால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது என அ வர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்பதில்லை எனவும், அவரது ஆசனத்தை அடுத்த அதிகூடிய விருப்பு வாக்கு பெற்றுக்கொண்டவருக்கு வழங்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

ஜெனீவா தீர்மானம் குறித்து உரையாற்ற 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும், மஹிந்த ராஜபக்ஸ அன்றைய தினம் அவைக்கு சமமூகமளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அவை நடவடிக்கைகளை வேண்டுமென்றே புறக்கணிப்போரின் உறுப்புரிமையை ரத்து செய்ய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.