Header Ads



கண்ணீர் விட்டழுதார் றிசாத் பதியுதீன்..!

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

இப்போது 3 நாட்களுக்கு முன், இலங்கை நேரப்படி அதிகாலை வேளை, சாகல தேரருடன் தான் மேற்கொள்ளவுள்ள வில்பத்து தொடர்பான விவாதம் பற்றி அமைச்சர் றிசாத் பதியுதீன்  ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வட்ஸப் மூலம் உரையாடினார்.

வழமை போன்றில்லாமல் அவருடைய குரலில் சோகம் ததும்பியிருந்தது. 

பல சந்தர்ப்பங்களில் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தனிப்பட்ட வகையிலும், பொதுவாகவும் 'தில்'லாக பேசும் அவர் அன்று கவலைப்பட்டவராகவே உரையாடினார்

ஒரு கட்டத்தில் அவர் அழுதார்...!

தனக்கு எதிராக பச்சை பொய் சொல்லப்படுவதாகவும், குறித்த விவாதத்தில் தான் பங்குகொள்ளாவிட்டால் இனவாத பௌத்த தேரர்கள் தெரிவிக்கும் விடயங்கள் சிங்கள சமூகத்திடையே அப்படியே படிந்துவிடுமெனவும், தான் வடக்கு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பாரெனவும் அவர் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பினார்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் எப்போதாவது முஸ்லிம் சமூகத்திற்காக நீதிமன்ற வாசற்படிகளை மிதித்திருக்கிறார்களா..? பௌத்தசிங்கள தேரர்கள், அரசியல்வாதிகளின் ஊடகங்களின் தாக்குதலுக்கு என்னைப் போன்று உட்பட்டிருக்கிறார்களா என ஆத்திரப்பட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிராகவும், அந்த முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற வகையில் எனக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றம் சுமத்தும்போது நான் வாய்மூடி மௌனியாக இருப்பதா, இதற்காகவா எனக்கு அல்லாஹ் அரசியல் அதிகாரத்தை தந்துள்ளான் எனவும் கவலை தேய்ந்த குரலில் கேள்வியெழுப்பினார்.

'இறைவன் துணை நிற்பான்' என்ற ஆறுதல் வார்த்தையை அவருக்கு ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் கூறமுடிந்தது.

மேலும் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் இந்த போலிப் பிரச்சாரங்களை சில முஸ்லிம்களும் நம்பிக்கொண்டு, பலவழிகளில் அவதூறு பரப்பி வருவதாகவும்  றிசாத் பதீயுதீன் மனவேதனைப்பட்டார்.

அவரிடம் கூறுவதற்காக வைத்திருந்த சில ஆலோசனைகளையும் (ராஜித்த சேனாரத்தினாவின் கூற்றுக்கள்) ஜப்னா முஸ்லிம் இணையம் அவரிடம் தெரிவித்தது. சாகல தேரருடனான விவாதம் நடந்தபின்னர் அதுகுறித்து உடனடிக் கவனம் செலுத்துவதாகவும் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்தக் குறிப்பை சாகல தேரர் றிசாத் பதியுதீன் விவாதத்திற்கு முன்னமே எழுத ஜப்னா முஸ்லிம் இணையம் திட்டமிட்டிருந்தது. எனினும் விவாதத்தின் பின்னரே இந்த குறிப்பை எழுதுவது சிறந்தது என கருதியமையால் இப்போது பகிரங்கப்படுத்துகிறோம்.

16 comments:

  1. Jaffna Muslim ஏன் விவாதத்துக்கு பின்னர் இந்த குறிப்பை எழுத வேண்டும் என தீர்மானித்தது என்பது எமக்கு புரியவில்லை. அமைச்சர் ரிசாத் பதுர்தீன் அவர்கள் அழுது புலம்பி ஏனைய அரசியல் வாதிகளை குற்றம் சுமத்த வேண்டிய தேவையில்லை என்றே நாம் கருத்துகிறோம். தனது அரசியல் பயணத்தில் ( சுட்டிக்காட்ட தேவையில்லை என நினைக்கிறோம் ) அடைந்து கொண்ட சகலவிடயங்களையும் இவர் குறை கூறும் அரசியல் வாதிகளிடம் பங்கு போட்டுக் கொண்டாரா? எதற்காக அவர் ஏனைய அரசியல் வாதிகளை குரைகூற வேண்டும்?

    Jaffna Muslim எப்போதும் நடு நிலையாகவும் முஸ்லிம் மக்களுக்கும் வாசகர்களுக்கும் உள்ளதை உள்ள படி தெரிவிக்கும் என நம்புகிறோம். அதுதான் பத்திரிக்கை தர்மமும் ஆரோக்கியமான சமூகத்தையும் கட்டி எழுப்பலாம் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.

    அமைச்சர் ரிசாத் அவர்களே, ஒன்றும் குடி மூல்கிப் போகவில்லை, அரசியலில் ஏற்படும் சிறு சிறு நெருக்கடிகளை கண்டு மனம் தளர வேண்டாம். நீங்கள் உண்மையாக மக்களுக்காக குரல் கொடுங்கள் முடியுமான வரை அவர்களின் நல்வாழ்வுக்கு உதவுங்கள் நிட்சயம் அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். சத்தியம் எப்போதும் வெல்லும்.

    ReplyDelete
  2. Jaffna Muslim ஏன் விவாதத்துக்கு பின்னர் இந்த குறிப்பை எழுத வேண்டும் என தீர்மானித்தது என்பது எமக்கு புரியவில்லை. அமைச்சர் ரிசாத் பதுர்தீன் அவர்கள் அழுது புலம்பி ஏனைய அரசியல் வாதிகளை குற்றம் சுமத்த வேண்டிய தேவையில்லை என்றே நாம் கருத்துகிறோம். தனது அரசியல் பயணத்தில் ( சுட்டிக்காட்ட தேவையில்லை என நினைக்கிறோம் ) அடைந்து கொண்ட சகலவிடயங்களையும் இவர் குறை கூறும் அரசியல் வாதிகளிடம் பங்கு போட்டுக் கொண்டாரா? எதற்காக அவர் ஏனைய அரசியல் வாதிகளை குரைகூற வேண்டும்?

    Jaffna Muslim எப்போதும் நடு நிலையாகவும் முஸ்லிம் மக்களுக்கும் வாசகர்களுக்கும் உள்ளதை உள்ள படி தெரிவிக்கும் என நம்புகிறோம். அதுதான் பத்திரிக்கை தர்மமும் ஆரோக்கியமான சமூகத்தையும் கட்டி எழுப்பலாம் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.

    அமைச்சர் ரிசாத் அவர்களே, ஒன்றும் குடி மூல்கிப் போகவில்லை, அரசியலில் ஏற்படும் சிறு சிறு நெருக்கடிகளை கண்டு மனம் தளர வேண்டாம். நீங்கள் உண்மையாக மக்களுக்காக குரல் கொடுங்கள் முடியுமான வரை அவர்களின் நல்வாழ்வுக்கு உதவுங்கள் நிட்சயம் அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். சத்தியம் எப்போதும் வெல்லும்.

    ReplyDelete
  3. I thought the same thing, while reading that you should have written this article before the debate, but I think you guys did the correct thing to publish this after the debate.

    It's good that Mr Rishad went to the debate but will the racist Sinhalese agree to him ? I doubt it. They know that their wrong.
    People who are against Islam normally well aware of our religion and the facts but they will find a loophole to mislead the innocents. They will quote out context or when you answer they will divert the matter into something else in order to confuse people.

    ReplyDelete
  4. வில்பத்து பிரச்சினை ரிஷாத் பதியுத்தீன் உடைய சொந்த பிரச்சினையாக காட்டுவதற்கு ஒரு குழுவினர் முயற்சி எடுக்கின்றனர் அப்படி இல்லாமல் இது முழு இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையாக காட்டுவதிலேதான் எதிரிகளின் தோல்வி தங்கியுள்ளது .தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் வீரர்கள் ஒருவரையேனும் தற்போது காணவில்லையே .

    ReplyDelete
  5. சமூதாயத்துக்காக கவலைப்படுவது பொறுமையாக காப்பது சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையில் இலகுபடுத்தும் யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து சகல கவலைகளையும் இனமையிலும் மறுமையிலும் சந்தோஷம் நிறைந்த வாழ்வை கொடுப்பாயாக இவரின் பெற்றோர்களை ஈருலகிலும் கண்ணியப்படுத்துவாயாக இவரின் சந்ததிகளையும் தீனுக்காகவும் சிறந்த சமூகம் சேவைக்காகவும் காபூல் செய்வாயாக ஆமீன் யாறப்பல் ஆலமீன்

    ReplyDelete
  6. இந்த செய்திகளை நான் தொடர்ந்து வாசித்து வரவில்லை.

    இனவாதம், மதவெறி எல்லா தளங்களிலும் புகுந்து கொள்கின்றது.
    தேரரின் குற்றச்சாட்டு பொய் என்றால், இந்த முஸ்லிம் அமைச்சர் அங்கம் வகிக்கும் அரசாங்கம் தேரருக்கு எதிராக அவதூறு வழக்கை முன்னெடுக்க வேண்டுமல்லவா?

    ReplyDelete
  7. Therarukku ethiraka walakku pathovu saiya pattathaka media moolam ariya kidaithathu....

    ReplyDelete
  8. Therarukku ethiraka walakku pathovu saiya pattathaka media moolam ariya kidaithathu....

    ReplyDelete
  9. I admire Honourable Minister Rishad Badurdeen for his brave argument with Anantha Therar. Issue of resettlement of Jafna Muslims is not only their own problem. Than is the main issues of all Muslim communities. Allah, may succeed all your effort and grant you strength and confidence to stand against all our enemies. Our prayer for you and peaceful solution for our society.

    ReplyDelete
  10. பிரச்சினையை இவர் முடிக்கவும் மமாட்டார் பிறர் தலையிட்டு ஏதும் தீர்வு சொன்னால் வடபுல முஸ்லிம்களுக்கு எதிரானவர் எ முத்திரை குத்துகிறார்.

    பிரச்சினையை தானாக வழக்கிழக்கும் போது கூட வலிந்து தூன்டுகிறார். நடுநிலையான விசாரனைக்கு ஏன் அஞ்சுகிறார். விசாரனை என வரும் போது இனப்பிரச்சினையாக மாற்ற நினைக்கிறார்.
    பசிலுடன் தாம் சேர்ந்து செய்த விடயங்களை மறைத்து அதில் அரசியல் லாபம் தேடுகிறார். நீதிமன்றில் இருக்கும் பிரச்சினையை விட்டுவிட்டு எவ்வளவோ முக்கிய விடயங்கள் உள்ளதே அதை ஆற்றலாமே.
    நீதிமன்றுக்கே கல் எறிந்தவறாயிற்றே.
    விவாத மேடைகளுக்கே அதிக கவனம் கொடுக்கிறார். இலகுவாக அஸ்ரப் ஆகிவிடலாம் எ நினைக்கிறார் போலும்

    ReplyDelete
    Replies
    1. கொய்யால யாருடா reply போடுரவனும் அதை delete பன்ரவனும்

      Delete
  11. Siyath mohamed..stupid..dont drag your political prostitution here.keep aside in think about the muslims .he is fighting for muslins.

    ReplyDelete
  12. Mr Rishad's motive to go to the debate can be political but this is not the time to divide ourselves or isolate Mr Rishad. We have to show our solidarity in this.
    This debate was between Huq and Bathil. On this issue we must support Mr Rishad.
    So let's not divide based on party politics.

    ReplyDelete
  13. அடே அப்பா முஸ்லிமுக்காக பைட் பன்ராராமுல.
    அப்ப கோர்ட் க்கு கல் எறிந்ததும் அதுதான் போல.

    ReplyDelete
  14. siyath mohmed சமூகப் பிரச்சினைகளில் பிரித்துப் பார்க்க வேண்டிய விடயங்களை பிரித்துப்பார்க்க வேண்டும் தோழரே. ஒருவரை 100% நல்லவரென்றோ அல்லது 100% கெட்டவரென்றோ முத்திரை குத்திவிட நினைப்பது அநியாயம். விவாதத்தை அவதானித்தேன் இவர் பக்கம் நியாயம் இருப்பது தெரிகிறது. இந்த பிரச்சினையை பொருத்தமட்டில் இவர் சரியெனவே தெரிகிறது. (விவாத்திற்கு முன் எனது கருத்தும் மாற்றமாகவே இருந்தது)

    ReplyDelete
  15. Dear Siyath Mohamed .. pleas refer the case and find out what is the cause of action for throwing stone, before you type those comments.

    ReplyDelete

Powered by Blogger.