Header Ads



முஸ்லிம் நாடுகளில் உயிர் பலிகள், அதிகம் இடம் பெறுகின்றன - மீழாத் விழாவில் மைத்திரி

மக்களை நல்வழிப்படுத்தவே சமயங்கள் எப்பொழுதும் முன்னின்றன. உலகில் தோன்றி மறைந்த மதத்தலைவர்கள் அனைவரும் அதனையே வழிறுத்தினர் என ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிசேனா தெரிவித்தார்.

கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில்  (24.12.2015). இடம் பெற்ற தேசிய மீழாத் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

உலகில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவிதமான கலாச்சாரங்கள்  காணப்பட்டன. அவற்றின் மூலம் மனிதன் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த பல்வேறு முயற்சிகளையும் எடுத்துவந்தான்'. அந்த அடிப்படையில் காலத்திற்குக் காலம் உலக நாடுகளில் மோதல்கள் இடம் பெற்ற வரலாறுகள் உண்டு. குறிப்பாக புத்தர் பிறந்த காலம் அதன் பின் யேசுநாதர் பிறந்த காலம் பின்னர் மு1ம்மத் நபி பிறந்த காலம் உற்பட இக்காலப் பகுதிகள் எல்லாவற்றிலும் உலக நாடுகளில் மோதல்களைக்கண்டோம். ஆனால் சமயத் தலைவர்களான அவர்கள தோன்றி அக்காலப் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் மனிதப்பண்புகளை உலகிற்கு வழங்கழனர்.

இப்போது நாம வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டமும் அதே போன்று ஒரு காலக்கட்டமாகும். இன்றும் உலக நாடுகளில் மோதலகனள் அதிகம் ஏற்படுகின்றன. எனவே மேற்சொனன சமயக் கருத்துக்கயள் இன்றைக்கும் தேவையான ஒன்றானக உள்ளது.

இலங்கை வரலாற்றைப் பொருத்தவரை 8 தசாப்த காலமாக அடிக்கடி இன மோதல்களை அவதானிக்க முடிந்தது. அதில் கடந்த மூனறு தசாப்தங்களாக மிகக் கசப்பான அனுபவங்களை நாம் பெற்றோம். அதன் மூலம் நாம் கற்ற பாடம் முக்கியமானது. அதுதான் நாளை நல்லதாக இருக்க வேண்டும். அதற்கான சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்காகும்.

இன்று பொதுவாக முஸ்லிம் நாடுகளில் உயிர் பலிகள் அதிகம் இடம் பெறுகின்றன. இதற்கான காரணத்தை தேடும் பணியில் பலா ஈடுபட்டுள்ளனர். அணடமையில் நான் புனித பாப்பரசரைச்  சந்தித்து போது அவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி நாடுகளுக்கிடையே யுத்தம் அல்லது மோதல் ஏற்படக் காரம் என்ன. என்று நான் மௌனமாக இருந்தேன். அதற்கு அவர் கூறிய பதில் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. யுததம் அல்லது மோதலுக்கு நாடுகளோ, அரசுகளோ அல்லது தாக்குதல் நடத்தும் பயங்கர வாதியோ காரணம் அல்ல. ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் நாடுகளுமே அதற்குப் பொருப்புக் கூறவேண்டும். குறிப்பிட்ட ஒரு மோதலில் இருபக்கமும் ஒரே நிறுவனம் ஆயுதங்களை வழங்குகின்ற நிலைகளைக் கூட அல்லது ஒரே நாடு ஆயுத விற்பனையை மேற்கொள்கின்ற நிலைகளையும் காணமுடிகிறது எனக்கூறினார்.

1 comment:

  1. மாமனிதர்களின் வழ்வியல் தத்துவங்கள் நடைமுறையில் சொற்பமே.கொண்டாட்டங்களுக்குள் சுருங்கிப்போனது உலகம்.
    அன்றைய நிகழ்வின் தமிழ் மொழி மூல அறிவிப்பாளர் யாரும் சுதாரிக்கும் முன் திடீரென மேடையில் வைத்து சனாதிபதியுடன் செல்பி எடுத்தது அருவறுக்கத்தக்கது. இலங்கைவாழ் ஓர் சமூகத்தின் தேசிய நிகழ்வொன்றின் தரம் கெடுக்கப்பட்டு விட்டதைப்போல் உணர்ந்தேன். அதில் அவரின் பெற்றோரின் தரத்தையும் அவர்களின் வளர்ப்பின் தரத்தையும் மட்டிட முடிந்தது. அற்பர்களுக்கு இடமளித்தால் தலைகால் புரியாது என்பது நிதர்சனமானது. தலைசிறந்த ஓர் மாமனிதரின் நிகழ்வில் ஒரு தறுதலை.

    ReplyDelete

Powered by Blogger.