Header Ads



மஹிந்த ராஜபக்ஷவின், உயிருக்கு அச்சுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மேலதிக ராணுவ சிப்பாய்களும், அதிகாரிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிற்ற, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம், புனர்வாழ்வளிக்காத பல முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவித்துள்ளமையால் மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 500 ராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் அகற்றப்பட்டதாக இன்று வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மேலும் 102 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் 80 பேர் பாதுகாப்பு பணிகளுக்காகவும், 22 பேர் நிர்வாக பணிகளுக்காகவும் ஈடுபடுத்தப்பட்டு;ள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.

எவ்வாறாயினும், செய்திச் சேவைக்கு தகவல் வழங்கிய அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்களுக்கான ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காவல்துறையினரின் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் காவல்துறை பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.