Header Ads



பணம் நகை காணாமல் போனதால் தற்கொலைக்கு முயற்சி - உரியவரிடம் ஒப்படைத்த முஸ்லிம்கள்


தூய்மைப்பணியின் தொடர்ச்சியாக இன்றையதினம் சைதாப்பேட்டை பகுதியில் டிஎன்டிஜேவின் தொண்டர் படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பைத்தொட்டியில் ஒரு டிபன் பாக்ஸ் கண்டெடுக்கப்பட்டது. அதை நமது சகோதரர்கள் திறந்து பார்த்த போது அதில் கிட்டத்தட்ட 10 பவுன் நகையும், ரூ 1 லட்சம் ரொக்கப் பணமும் இருந்துள்ளது.

பணத்தையும், நகையையும் தொலைத்த துயரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் அதன் உரிமையாளர் பூரணி என்ற மூதாட்டி. கண்டெடுக்கப்பட்ட உடனேயே இது குறித்து விசாரித்த தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பூரணி - பாலகுமாரன் தம்பதியினருடைய பணமும் நகையும் தான் அது என்பதை உறுதிப்படுத்தினர்.

அந்த தம்பதியர்களிடம் பணத்தையும், நகையையும் நமது சகோதரர்கள் பத்திரமாக ஒப்படைக்க நகைகளை சரிபார்த்த பிறகு, பணத்தையும் சரிபார்த்து டிபன் பாக்ஸோடு அதை பெற்றுக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

பணம் நமக்கு முக்கியமல்ல; நகை நமக்கு பெரிதல்ல; 

இறைவனின் திருப்பொருத்தம் மட்டுமே பெரியது என்ற அடிப்படையில் டிஎன்டிஜேவினர் செய்த இந்த மனிதநேயப் பணியைக் கண்டு அந்தப்பகுதியில் உள்ள பிறமத சகோதரர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். 

1 comment:

  1. May Allah accepts all your good deeds brothers! and he'll acknowledge your exemplary role as a turnaround of entire Tamilnadu under the immaculate Islamic conviction.

    ReplyDelete

Powered by Blogger.