உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் சல்மான் + ஹஸன் ரூஹான்
உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த ஓ.ஆர்.பி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உலகளவில் 65 நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக 59 சதவிகிதம் பேரும், விரும்பவில்லை என 29 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், மூன்றாம் இடத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், நான்காம் இடத்தில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, ஐந்தாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளனர்.
ஆறாவது இடத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், ஏழாவது இடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எட்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், ஒன்பதாவது இடத்தில் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ், பத்தாவது இடத்தில் ஈரான் அதிபர் ஹஸன் ரூஹான் உள்ளனர்.
Post a Comment