மஹிந்தவை இணையுங்கள், நாமல் வேண்டாம் - மைத்திரி உத்தரவு
ஜனாதிபதி பதவிப் பிரமாண ஓராண்டு பூர்த்தி நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பெயரை உள்ளடக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்து நிறைவேற்றப்படும், ஜனவரி மாதம் 9ம் திகதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் யோசனையை நாடாளுமன்றில் முன்வைப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
பதவிப் பிரமாணம் செய்து கொண்டு ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடு குறித்து பேசப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மஹிந்த தரப்பு இருவரையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இந்த குழுவில் இணைத்துக் கொள்ளுவோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நேரத்தில் நாமலை குழுவில் சேர்ப்பது பொருத்தமற்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment