ஞானசாரர் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்த, மஹிந்த ராஜபக்ஸவுக்கு பலத்த ஏமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி மஹிறந்த ராஜபக்ஸ பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரர் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்திருந்ததாக சட்டத்துறை வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டின.
ஞானசாரர் குற்றங்கள் செய்திருப்பது உண்மையென்ற போதிலும்கூட, அவர் அல்குர்ஆனை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்திய விவகாரம் உள்ளிட்ட மற்றும் சில விடயங்கள் தொடர்பில் அவரை கைது செய்வதற்கான ஏது நிலை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஞானசாரர் கைது செய்யப்படுவதை விரும்பியிருந்ததாகவும், ஞானசாரர் கைது செய்யப்படுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் மஹிந்த ராஜபக்ஸ் காணப்பட்டதாகவும், இதன்மூலம் சில குறுகிய அரசியல் லாபங்களை பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருந்தாகவும், எனினும் நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸ குறுகிய அரசியல் லாபம் அடைவதை தடுப்பதற்காக ஞானசாரரின் கைது தாமதிக்கப்படுவதாகவும் அந்த சட்டத்துறை வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டின.
இவரின் கைது இவர்களின்(அபயாராம பிரிவு + BBS இன்) வெற்றி. இந்த தேரர் கைது செய்யப்படக்கூடாது.
ReplyDeleteபெரும் பெரும் பொய்களைக்கூறி இலங்கையிலுள்ள ஒவ்வொரு மதத்தவர்களும் மற்ற மதத்தவரை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். அதிலும் முக்கியமாக அனைவரையும் முஸ்லிம்களை திரும்பிப்பார்க்க வைக்கிறார். சந்தேகத்தை விதைக்கிறார் அவரே மார்க்க விளக்கம் கேட்கிறார். இலவச களம் அமைத்து தருகிறார். அழகான விளக்கங்கள், பண்பான நடத்தைகள், சானக்கியமான அணுகுமுறைகள், உங்கள் மதங்களை மற்றவருக்கு எத்திவைக்கும். நீங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கவேண்டியதில்லை நல்லவர்களாக நடந்துகொண்டாலே போதும். குற்றச்சாட்டுகளுக்கு நல்ல பண்பான விளக்கம் போதும் விவாதங்கள் தேவையில்லை. இவரின் கற்கள் கட்டிடத்திற்கு உதவும்.
ஆம் இவன் கைது செய்யப்பட்டு பெரிய இனவாதியாகவூம் சிங்கள மக்களுக்காக முஸ்லிம்களை எதிர்த்து சிறை சென்றவனாக வெளிவருவதை விட இவனைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதன் மூலம் அடக்க வேண்டும்
ReplyDelete