Header Ads



றிசாத் பதியுதீன், கச்சிதமாக விவாதம் மேற்கொண்டார் - சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்

வில்பத்து விவகாரமென்பது ஒரு தனிநபரின் விவகாரம் அல்ல, அடிப்படை வாழ்வியல் உரிமைகள் கபளீகரம் செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் விவகாரம் ஆகும்.  அதுதொடர்பிலான விவாதத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் கச்சிதமாக மேற்கொண்டார் என சமூக ஆர்வலரும், பிரபல சட்டத்தரணியுமான ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் உம்றா சென்றிருந்தேன். அதனால் சாகல  தேரருடன் அமைச்சர் றிசாத் மேற்கொண்ட விவாதத்தை உடனடியாக பார்க்கவில்லை. பின்னர் அதனை பார்த்தேன். அமைச்சர் கச்சிதமாக அந்த விவாத்தை மேற்கொண்டுள்ளார்.

காலம்சென்ற அஸ்ரப் அவர்கள் பௌத்த தேரர் ஒருவருடன் மேற்கொண்ட விவாதத்தையும் இன்று (30) மீண்டுமொரு தடவை பார்த்தேன்.

அந்த விவாதம்,  அன்றைய காலத்தின் தேவையாக இருந்தது. தற்போது அமைச்சர் றிசாத் மேற்கொண்ட விவாதம் இன்றைய காலத்தின் தேவையாகவும்,  கட்டயாயமாகவும் இருந்தது. தெளிவு பெற வேண்டியவர்கள் தெளிவு பெற்றிருப்பார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

தேசிய அரசிலில் றிசாத் பிடித்துள்ள இடம்,  முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றும உயர் பணிகளை சகித்துக்கொள்ள முடியாத சிலர், தாம் அடைந்துள்ள வங்குரோத்தை மறைப்பதற்காக சம்பளத்திற்கு  சிலரை அமர்த்தி, இணையங்களிலும், சமூகத்தளங்களிலும் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள். எனினும் முஸ்லிம்கள் சம்பந்தபட்டவர்களையும், அதுதொடர்பான பிரயோசனமற்ற விமர்சனங்களையும் நிராகரிப்பர் எனவும் ருஸ்தி ஹபீப் மேலும் தெரிவித்தார்

3 comments:

  1. We need politician with back born. Br. Rishad Badiudeen is doing great job for SL Muslim community. Allah will protect him and give us more politician in his capacity.

    Also SLMC should learn a lot from Br.Rishad Badiudeen.

    ReplyDelete
  2. Pls Don't try to compare with Dr.MHM.Ashraff. That is too much

    ReplyDelete
  3. Yes Minister Rizad took up the challenge n presented facts well to the dismay of rivals.
    Well done.
    Alhamdulillah

    ReplyDelete

Powered by Blogger.