Header Ads



தமிழ்மொழி மூல பாடசாலை மாணவர்களுக்கான ஊடகக் கருத்தரங்கு


அரசாங்கத் தகவல் திணைக்களம் பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதில் ஊடகப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்குத் தொடரின் முதலாவது கருத்தரங்கு கொழும்பு நகர்ப்புற தமிழ் பாடசாலை மாணவர்களுக்களின் பங்குபற்றலுடன் (02) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி எச்.டீ.எஸ். மல்காந்தி அவர்களும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். சேந்தில் வேலர் அவர்களும் தினகரன் பத்திரிகையின் முன்னால் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன், நவமனி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் அவர்களும் கொண்டனர்.

இக்கருத்தரங்கின் விரிவுரையாளர்களாக நவமனி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் எஸ். மோசேஸ், தினகரன் பத்திரிகையின் முன்னால் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன், தேசிய கல்வி நிர்வனத்தின் முன்னால் பிரதம செயற்றிட்ட அதிகாரி எம்.எச்.எம். ஹசன் ஆகியோர் குறித்த கருத்தரங்கில் கலந்து விரிவுரைகளை நடாத்தினர்.    




No comments

Powered by Blogger.