எதிர்கட்சி குற்றம் சுமத்துகிறது
ஆளும் கட்சியானது, கட்சித்தலைவர்களின் சந்திப்பில் எடுக்கும் தீர்மானங்களை செயற்படுத்தாது தமக்கு தேவையான விதத்தில் செயற்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன 20-12-2015 கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அரசியலமைப்பை திருத்தியமைப்பதற்காக நாடாளுமன்றத்தை ஒரே மத்திய செயற்குழுவாக கருதுவதாக சபைத்தலைவர் இணங்கினாலும் நேற்று பிரதமர் நாடாளுமன்றத்தில் மாறுபட்ட கருத்தை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சபாநாயகரும், கட்சித் தலைவர்களும் அரசியலமைப்பு தொடர்பில் செயற்பட முடியாது.
பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட வேண்டும் என கூறி தாம் எடுத்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தாம் எடுத்த தீர்மானத்தை விளக்குவதற்கு சபாநாயகரும் முயற்சித்தார்.
அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள நிலையியல் கட்டளைகள் தொடர்பாகவும் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்த போதும், அந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை. செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும நேற்று இடம்பெற் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
எந்தவொரு அரசாங்கத்திலும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஒரு புனிதத் தன்மை காணப்பட்டது.
முதன் முறையாக அந்த புனிதத் தன்மை, நம்பிக்கை, இழக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment