கபீர் ஹாசீமுக்கு, டிலான் பெரேரா எச்சரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் விமர்சனங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆளும் கட்சியில் கூட்டணி வைத்துள்ள ஏனைய கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனம் செய்யக் கூடாது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய பங்காளிக் கட்சிகளின் உணர்வுகளையும் ஐக்கிய தேசியக் கட்சி மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்த போது அதன் கொள்கைகள் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் நேற்றைய தினம் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் டிலான் பெரேரா இந்தக் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடாத்தும் கட்சியொன்றின் பொதுச் செயலாளர் தாம் என்பதனை கபீர் ஹாசீம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரே தற்போது புதிய அரசாங்கத்தை வழிநடத்தி வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Kabeer hasheem is a waste..nothing doing to his voters or the muslim community. He's very .much aware kegalle district muslims will vote him and unp.ashamed of voting for this fellow.
ReplyDelete