Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு மனநோய் - கட்சித் தலைவர்களும் பாதிப்பு


நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சிலருக்கு உளவியல் நோய் காணப்படுவதாக வார இறுதி சிங்களப் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பய்போலா எபெக்டிவ் டிசோடர் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வு நடத்தியதன் மூலம் இந்த விடயத்தை கண்டறிந்து கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத, இலங்கையின் முன்னணி மனநோய் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் சில உறுப்பினர்கள், அமைச்சர்கள் உளிட்டவர்கள் தம்மிடம் இந்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வருவோரில் பிரபல அமைச்சர் ஒருவரும் அவரது மகனும் உள்ளடங்குகின்றனர்.

இந்த நோய் ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்படாத சிலரும் நாடாளுமன்றில் இருப்பதாகவும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் உளவியல் பிரச்சினைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

சில கட்சித் தலைவர்களும் உளவியல் அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பய்போலாவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏனைய எல்லோரை விடவும் தாம் பெரியவர்கள் தம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற மனோ நிலையைக் கொண்டு செயற்படுகின்றனர்.

ஒரே நேரத்தில் இயல்பாக இருப்பவர்கள் மற்றொரு நேரத்தில் முற்று முழுதாக இந்த அழுத்தங்களின் ஆதிக்கத்தினால் பாதிக்கப்படுகின்றன..

எதைப் பேசுகின்றோம் என்பது புரியாமல் பேசுவது, தூக்கமின்மை, அதிகமாக கோபம் ஏற்படுதல் போன்றன இந்த நோயின் அறிகுறிகளாகும்.

பிரபல வர்த்தகர்கள் சிலரும் இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்பது ஆபத்தாகலாம் என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பொதுவாக தம்மிடம் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் பற்றிய அந்தரங்கத்தன்மையை 100 வீதம் பேண வேண்டியது மருத்துவர்களின் அடிப்படை தொழில்சார் ஒழுக்கவிதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.