Header Ads



ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்குதல்


சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான Sergei Shoigu நேற்று ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் காணொளியில் பேசியுள்ளார்.

அப்போது, ஜனாதிபதியின் உத்தரவின்படி, மத்திய தரைக்கடலில் ரஷ்யாவிற்கு சொந்தமான Rostov-on-Don என்ற நீர்மூழ்கி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு ஏற்கனவே தகவல்கள் அளித்துள்ளதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்களை நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, நீர்மூழ்கி கப்பலில் இருந்து Kalibr ரக ஏவுகணைகளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைநகரான ராக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்கு, பெட்ரோலிய எண்ணெய் கிடங்கு உள்ளிட்டவைகளை வீழ்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான உயிர்சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட உதவி செய்ய வேண்டும் என சிரியா ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஏற்று ரஷ்யா கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.