Header Ads



பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகள், ரணிலின் கவனத்திற்கு..!


-ஏ.எச்.எம்.பூமுதீன்-

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளுக்கும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் விசேட ஏற்பாட்டின் கீழ் அவரது தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்ளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ,தேவைப்பாடுகள் மற்றும் பொதுவாக முஸ்லிம் சமுகத்தின் கல்வி நிலை தொடர்பில் விசேட திட்டங்களை வகுக்கும் அடிப்படையிலேயே இக்கலந்துரையாடலை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் அமைச்சர் நிரோசன் பெரேரா ,பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலின் போது பிரதமரிடம் நேரடியாகவே தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மகாப்பொல புலமைப்பரிசில் நிதியினை அடுத்த வருடம் முதல் அதிகரிப்பதற்கு பிரதமர் எடுத்த நடவடிக்கைக்கு இதன் போது நன்றி தெரிவித்த முஸ்லிம் மாணவர்கள், இக்கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.


No comments

Powered by Blogger.