Header Ads



மைத்திரியை மறந்துபோன விக்கிரமசிங்க


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறும்புத்தனமாக ஒருவருடன் தொலைபேசியில் பேசிய சம்பவம்  இன்று (24)  காலை இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தலின்போது தமக்கு எதிராகவும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட பாடகர் ஜனக விக்கிரமசிங்கவுக்கே இந்த தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின்போது இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி, பாடகர் ஜனகவை தொடர்புகொண்டு தாம் அவரின் பழைய நண்பர் என்று குறிப்பிட்டார்.

எனினும் ஜனகவினால் ஜனாதிபதியின் குரலை அடையாளம் புரிந்துகொள்ள முடியவில்லை.

இதனையடுத்து மணமகளின் தந்தையான கலைஞர் குமாரஸ்ரீ பத்திரன, விக்கிரமசிங்கவுக்கு அழைப்பை ஏற்படுத்தியது ஜனாதிபதி என்று விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் ஜனாதிபதியுடன் தொடர்புக்கொண்ட ஜனக விக்கிரமசிங்க, குரலை புரிந்துகொள்ள முடியாமைக்காக மன்னிப்புக்கோரினார்.

No comments

Powered by Blogger.