Header Ads



பாகிஸ்தானில் நரேந்திர மோடிக்கு வீடு, இனி அடிக்கடி அங்கு செல்லவும் திட்டம்

உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேத்தி மெஹருன்னிசாவின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக லாகூரில் தரையிறங்கிய மோடியை உற்சாகத்துடன் வரவேற்ற நவாஸ், அங்கிருந்து அவரை ராவிண்ட் பகுதியில் உள்ள தனது பாரம்பரிய வீட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்றார்.

வரலாற்றிலேயே இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் ஒன்றாக பயணம் செய்தது இதுவே முதல் முறை என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தனது குடும்ப உறுப்பினர்கள் பலரையும் மோடிக்கு நவாஸ் ஷெரிப் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது, “உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இங்குதான் வசிக்கிறார்களா?” என்று ஆச்சரியத்துடன் மோடி கேட்க, “ஆமாம், 70-80 குடும்ப உறுப்பினர்கள் இந்த பெரிய வீட்டில்தான் வசிக்கின்றனர்.” என்றார் நவாஸ்.

பின்னர் நவாசின் அரண்மனை போன்ற வீட்டை சுற்றிப்பார்த்த மோடி, இங்கு நான் இனி அடிக்கடி வருவேன் என்று கூற, “தாராளமாக, இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என அகமகிழ்ச்சியுடன் நவாஸ் கூறினார்.

80 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, நவாசின் தாயாரது காலை தொட்டு ஆசி பெற்ற மோடி, நவாஸ் ஷெரிப்பிடம் புடவைகள் உட்பட பல்வேறு பரிசுப்பொருட்களையும் வழங்கியுள்ளார்.
 

1 comment:

  1. If most of the Indians and Pakistanis are appreciating the visit, what make you to publish the news showing negative impact?

    ReplyDelete

Powered by Blogger.