இலங்கையில் நேற்றிரவு நிலநடுக்கம்..? பிரதேச மக்கள் பீதி..!
கண்டி, பல்லேகலே பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு 10. 16 அளவில் பல்லேகலே பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தின் கீழ் பாரிய பிளவடையும் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்தம் காரணமாக பிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த சத்தம் நில அதிர்வாக இருக்கலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பல்லேகலே பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பூகோளவியல் திணைக்களமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ மையமோ இதுவரையில் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment