Header Ads



"புதிய அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு, எதிரான நடவடிக்கைகளில் வெற்றியடையவில்லை"

புதிய அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெற்றியடையவில்லை என அமைப்பின் ஆலோசகர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊழல்களுக்கு எதிரான அமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக இரண்டாவது முறைப்பாட்டை செய்திருந்தது எனவும், அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சஜின் வாஸ் குணவர்தனவிற்கு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சஜின் வாஸ் குணவர்தன எந்த வழக்கில் அரச தரப்பு சாட்சியாளர் என்பது யாராலும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலதா மாளிகையின் தியவடன நிலமேக்கு எதிராகவும் முறைப்பாடு செய்திருந்தோம், அந்த முறைப்பாடுகள் வெறுமனே முறைப்பாடுகள் அல்ல முழு அளவில் சாட்சியங்கள் ஆதாரங்களுடன் அவை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அநேகமான முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றார், எனினும் அவருக்கு எதிராகவும் ஐந்து முறைப்பாடுகள் காணப்படுகின்றன ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எல்லா அரசாங்கமும் மாரி, மாரி நாட்டை சூரையாடுகிறார்கள்.
    அப்பாவி பொதுமக்கள் தான் அந்த சுமையை சுமக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.