பில்கேட்ஸ் தன் பிள்ளைகளுக்கு விதித்த கட்டுப்பாட்டை, சுட்டிக்காட்டும் ஜனாதிபதி மைத்திரி
கையடக்கத் தொலைபேசி, கணனி என்பவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்வதற்கு இந்த நாட்டிலுள்ள பிள்ளைகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது தேவையானவற்றை மாத்திரம் கவனத்திற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துகளை கூறியுள்ளார்.
நாட்டின் முன்னேற்றம் கருதி மக்களுக்கு நீண்டகால முதலீடாக அறிவைப் போதிப்பதே அரசாங்கமொன்றினால் செய்யக்கூடிய ஆக்க்கூடிய சேவையாகும் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மக்கள் அனைவரும் நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் தொடர்பில் அறிவை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
உலக முதல்நிலை செல்வந்தரான பில்கேட்ஸ் கூட, 16 வயதைக் கடக்கும் வரை கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தக்கூடாதென தமது பிள்ளைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment