Header Ads



வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்காவில் இரட்டையர்களின் பிறப்பு விகிதம் உயர்வு

2014ம் ஆண்டில் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு ஆயிரத்துக்கு 33.9 என்ற அளவில் இருந்ததாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2014ம் ஆண்டில் 1000 குழந்தைகளில் 33.9 சதவிகிதம் குழந்தைகள் இரட்டையர்கள், இந்த விகிதம் 2013ம் ஆண்டிலும் 33.7 ஆக இருந்துள்ளது.

ஆனால், இது அமெரிக்க வரலாற்றின்படி மிகவும் அதிகம் என்றும், 1980களில் ஆயிரம் குழந்தைகளில் 18.9 சதவீதம் இரட்டைக் குழந்தைகள் இருந்ததாகவும், கடந்த 36 ஆண்டுகளில் இது அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு இரண்டு முக்கியக் காரணங்களும் கூறப்படுகிறது. ஒன்று, குழந்தைப் பேறுக்காக செயற்கை கருத்தரித்தல் முறையைப் பின்பற்றுவதும், ஏராளமான பெண்கள் வயது முதிர்ந்த பிறகு குழந்தைப் பேறு அடைவதும் காரணங்களாகக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.