Header Ads



ரவியின் முன்மொழிவை எதிர்க்கும் தலதா - மைத்திரியிடமும் முறையிட்டார்

இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்மொழியப்பட்டுள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் ஏல விற்பனையை இலங்கையில் நடத்த அனுமதிக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதியைச் சந்தித்தபோதே நேற்று அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த யோசனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என தான் திடமாக நம்புவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன்,  இரத்தினக்கல் அகல்விற்கு வெளிநாட்டவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது இரத்தினக்கல் தொழில்துறையில் சுமார் 30 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், 

இரத்தினக்கல் ஏல விற்பனை, இரத்தினக்கல் வளம் இல்லாத நாடுகளிலேயே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.