பள்ளிவாசல்களுக்கு நாம் உதவியதன் மூலம், அவை புதுப்பொலிவு பெற்றன - மஹிந்த ராஜபக்ஷ
எமது ஆட்சிக் காலத்தில் சமய ஸ்தலங்களின் அபிவிருத்திகளை நாம் பன்சலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தியிருக்கவில்லை. பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களையும் அபிவிருத்தியில் உள்வாங்கியிருந்தோம்.
இன்று சிலர் எதிரான கருத்துக்களைத் தெரிவித்தாலும் அன்று அனைவருக்கும் மத சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹக்மன கம்மெதபிட்டிய ஸ்ரீ விஜயபிம்பாராமய விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
நாம் பன்சலைகளை மாத்திரம் அபிவிருத்தி செய்யவில்லை. பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களுக்கும் உதவி செய்தோம். இந்த உதவிகள் மூலம் அவை புதுப்பொலிவு பெற்றன. இன்று யார் என்ன கருத்துக்களை வெளியிட்டாலும் எமது ஆட்சியில் அனைத்து இனத்தினரும் தமது மதங்களை சுதந்திரமாக கடைப்பிடிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. எதுவித தடைகளும் இருக்கவில்லை. சில குழுக்கள் சில சந்தர்ப்பங்களில் சமய விரோத செயல்களை முன்னெடுத்தாலும் அரசாங்கம் அவற்றில் தலையிடவில்லை.
எல்.ரி.ரி.ஈ. முதலில் வடக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்றியது. விரட்டி விட்டது. அதன் பிறகு அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினர். எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான தமிழர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளினால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் துன்பங்களை அனுபவித்தார்கள்.
நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தோம்.
ஆமால்ல!, உடைத்து நொறுக்கியதால்
ReplyDeleteGood joke in 2015.still he talks like a child
ReplyDeleteஅடி பட பட நாங்க அவருக்கு பொன்னாட பொத்தி ரபான் கொட்டி கசீதா பாடி அவர தூக்கி வெச்சோம் தானே... இதையும் சொல்லுவார்.. இன்னமும் சொல்லுவார்... கேக்க ஆள் இரிக்கங் காட்டிலும்..
ReplyDeleteபரிசை முழுமையாக தட்டிச்செல்லும் பொய்
ReplyDelete