பிரிட்டனில் உள்ள இலங்கை, முஸ்லிம்களின் அவதானத்திற்கு...!
சுவிஸ் நாட்டில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இயக்க, ஊர், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சுவிஸில் உள்ள சகல இலங்கை முஸ்லிம்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டு இந்த அமைப்பில் செயற்படுகின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்)
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் மேம்பாடு கருதி, 2 மாடி கட்டிடங்கள் கொள்வனவு செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மஸ்ஜித்துல் ரவ்ளா என்ற பள்ளிவாசல் இயங்கிவருகிறது
குறித்த பள்ளிவாசலில் வாராந்தம் அல்குர்ஆன் பாடசாலை, சிறப்பு பயான் நிகழ்வுகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றுவருகிறது. இவற்றுக்கு மேலதிகமாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும் பல நிகழ:வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இவற்றில் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்று வருகின்றனர்.
2012 ஆம் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் கொள்வனவு செய்த இந்தப் பள்ளிவாசலுக்கான பெறுமதியில் ஒருதொகைப் பணம் செலுத்தபட்டுவிட்டது. மீதியுள்ள தொகையும் மிகவிரைவில் செலுத்தபட்ட வேண்டியுள்ளது..
இந்தத் தொகையை நாம் முழு அளவில் செலுத்திவிடும் பட்சத்தில், இந்த பள்ளிவாசல் முற்றுமுழுதாக இலங்கையர்களுக்கு உரித்தாகிவிடும். அத்துடன் எந்தவொரு வட்டிப்பணமும் செலுத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்படாது. (அல்லாஹ் அந்த பாவத்திலிருந்தும் நம்மை பாதுகாக்க வேண்டும்)
இந்நிலையில் உங்களால் முடிந்த உதவிகளை சுவிஸில் உள்ள இலங்கையர்களின் பள்ளிவாசலுக்கு வழங்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறோம். லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் சகலரும் முன்வந்து தம்மால் இயன்ற உதவிகளை செய்வதன் மூலம், இந்தப் பள்ளிவாசலானது இலங்கை முஸ்லிம்களுக்கு உரித்தாகுவதை உறுதிப்படுத்தமுடியும். அதன் பங்காளர்களாக பிரிட்டனில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் இருந்தார்கள் என்ற நற்பாக்கியமும் கிட்டும்.
இந்த தகவலை லண்டனிலுள்ள ஏனைய முஸ்லிம்களுக்கு எத்திவைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அந்தவகையில் எதிர்வரும் 25,26,27 ஆம் திகதிகளில் சுவிஸ் நாட்டிலிருந்து சகோதரர்களான ஹனீப், அமீர், பிர்தௌஸ் ஆகியோர் லண்டனுக்கு வருகை தரவுள்ளனர்.
Post a Comment