Header Ads



பாராளுமன்றத்தில் குழப்பநிலை

 நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நாளொன்றை வழங்குமாறு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரால் விடுக்கப்பட்ட கோரிக்கை காரணமாக இன்று (15) பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், இதற்கு லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எதிர்ப்பு வௌியிட்டனர்.

மேலும் வரவு செலவுத் திட்ட யோசனை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக, இது குறித்து கருத்து வௌியிட்ட நிதி அமைச்சர் விஜயதாஸ ராஜஷபக்ஷ கூறினார்.

எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.