சுன்னி சமூகத்தினரை இலக்குவைத்தே சிரியாவில், ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது - துருக்கி பிரதமர்
ரஷ்யாவானது வட சிரியாவில் தனது வான் தாக்குதல்கள் மூலம் இனத்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துருக்கிய பிரதமர் அஹ்மெட் டவுடோக்லு குற்றஞ்சாட்டியுள்ளார்.
லதாகியா பிராந்தியத்தைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களில் வசிக்கும் துருக்கிய இனத்தவர்களையும் சுன்னி சமூகத்தினரையும் இலக்கு வைத்தே ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதாக அவர் கூறினார்.
ரஷ்யாவானது சிரியாவிலான தனது தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்காகக் கொண்டுள்ளன என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் டவுடோக்லு விபரிக்கையில், சிரியாவில் ரஷ்யா வின் தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலம் பெறவே வழிவகை செய்துள்ளதாக கூறி னார்.
சிரிய எல்லையில் துருக்கியால் ரஷ்ய போர் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து துருக்கிக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவுகள் முறுகல் நிலையை அடைந்துள்ளன.
Post a Comment