Header Ads



மஹிந்த ராஜபக்ஸவை, அசைத்துக் காட்டிவிட்டு வந்தவர்கள் நாங்கள் - அமீரலி

”இந்த நாட்டிலே அசைக்க முடியாது என்றிருந்த மஹிந்த ராஜபக்ஸவை அசைத்துக் காட்டிவிட்டு வந்தவர்கள் நாங்கள், எனவே இனவாதக் கருத்துக்களையும், துவேசக் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் விதைக்கின்ற தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் எதிர் காலத்தில் அவர்கள் தமிழ் மக்களாலேயே தோற்கடிக்கப் படுவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்” என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரத்தீவுப்பற்று பிரதேசத்திற்குற்பட்ட அம்மன்குளம் விநாயகர் கருங்கல் உடைப்புச் சங்கத்திற்கு கருங்கல் உடைக்கும், இயந்திரத்தை வழங்கி வைத்து விட்டு உரையாற்றுகையிலே  இவ்வாறு தெரிவித்தார். 

பிரதியமைச்சரின் முயற்சியின் பலனாக விசேட நிதி ஒதுக்கிட்டில் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியில் இந்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
”மட்டக்களப்பு மாவட்டம் மனித நேயம் நிறைந்த மாவட்டமாகும்,  இந்த மாவட்டத்திலுள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். வறுமை இல்லாமல்,  கல்வி அறிவு கூடிய ஒரு சமூகமாக, மற்றவர்மீது பழி சொல்கின்ற குற்ற உணர்வு இல்லாதவர்களாக துவேசக்கருத்துக்களைப் பேசுகின்றவர்களாக இல்லாமல் இந்த மாவட்டத்திலே உள்ளவர்கள் அனைவரும் மிளிரவேண்டும். 

நான் தேர்தல்களில் வாக்குக் கேட்பதற்காக மக்களுக்கு உதவி செய்பவனல்ல, மக்கள் கஷ்ட்டத்திலிருந்து விடுபட்டு அவர்கள் சுயமாக உழைத்து வாழ்வதற்குறிய அடிப்படைக் கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எனது கடமையாகும்.

மதவாதத்தைப் பேசுகின்றவர்களும், துவேசக் கருத்துக்களைப் பேசுகின்றார்கள்,  அரசியல்வாதிகளும் வெவ்வேறு கோணங்களில் இதனைப் பார்க்கின்றார்கள், இவற்றையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை,  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமீரலி வரக்கூடாது என சில அரசியல்வாதிகள் பேசுகின்றார்கள்,  ஆனால் கடந்த 2 தசாப்பதங்களாக இந்த அமீரலி இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே அபிவிருத்திக்குழுவின் தலைவராக தனியாக இருந்து செயற்பட்ட வரலாறும் இருக்கின்றது. அப்போதும் கூட எந்த தமிழ் மக்களினது உரிமைகள் பறித்தெடுக்கப்பட்டது என யாரும் சொல்ல முடியாது.

சில அரசியல் வாதிகளுக்கு அவர்கள் அரசாங்கத்தின் பக்கமுள்ளார்களா? அல்லது எதிர்க் கட்சியின் பக்கமுள்ளார்களா? என்பது தொடர்பில் அவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம், ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் பதவி, தட்டிப்பறித்த பதவி அல்ல அது அமீரலியின் செயற்பாட்டுக்கு அவரது கட்சி கொடுத்த பதவியாகும். 

இந்த நாட்டிலே அசைக்க முடியாது என்றிருந்த மஹிந்த ராஜபக்ஸவை அசைத்துக் காட்டிவிட்டு வந்தவர்கள் நாங்கள்,  எனவே இனவாதக் கருத்துக்களையும், துவேசக் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் விதைக்கின்ற தமிழ் அரசியல் தலைவர்வர்களின் செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் எதிர் காலத்தில் அவர்கள் தமிழ் மக்களாலேயே தோற்கடிக்கப் படுவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். 

வீழ்வது நானாக இருந்தாலும், வாழ்வது தமிழானாக இருக்க வேண்டும், என்ற வார்த்தைகளைக் கூறி, தமிழ் மக்களை முறுக்கேற்றும் தமிழ் அரசியல் வாதிகளை 5 வருடங்களுக்கு ஒருமுறை தமிழ் மக்கள் ஆட்களை மாற்றுகின்றார்களே தவிர, புள்ளடிகளை மாற்றுகின்றார்கள் இல்லை. இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றபோது அவற்றினை எதிர்த்து துவேசக்கருத்துக்களை ஏனையவர்கள் விதைக்கின்றார்கள். 

எனவே இந்த மாவட்டத்திலுள்ள எந்த தமிழ் மக்களிடமும், எனக்கு வாக்களிக்குமாறு பலவந்தப் படுத்துவதற்குத் நான் தயாராக இல்லை கடவுளின் கிருபையால் நான் இந்த மாவட்டத்திலுள்ள மக்களுக்கு சாதி, இனம் பாராமல் சமமான முறையில் சேவை செய்து கொண்டிருக்கின்றேன். 

எதிர் காலத்தில் இந்த மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் தலா ஒவ்வொரு கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளேன். இதன்மூலம் அப்பகுதியிலுள்ள படித்த இளைஞர் யுவதிகள், வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் வாய்ப்பாக அமையும்,  ஜனவரி மாதம் வன ஜீவராசிகள் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் ஹாமினி ஜெயவிக்கிரம பெரேராவை இங்கு அழைத்து வந்து இங்குள்ள காட்டு யானைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவுள்ளோம்.” ஏன அவர் கருத்து  தெரிவித்தார்.

5 comments:

  1. Don't say lie ever. If the Hunais Farook did not come out from the ACMC & Mahinda government first, you all never leave from mahinda regime.

    ReplyDelete
  2. ACMC was negotiating with Mahinda up to last moment and you took the National List MP from Azwer as a part of the negotiation. Now you are talking as a champion.

    ReplyDelete
  3. Well said Subaideen and Ilma.

    ReplyDelete
  4. பாட நினைத்தால் கிழவியும் பாடுவாள் என்பதற்கினங்க சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாரு நல்லாவே பேசகற்ருக்கொன்டுள்ளார்கள் இப்போதைய அரசியல் வாதிகள்

    ReplyDelete
  5. நீங்கள் ஒரு காலம் மகிந்வை கடவுள் என்று சொல்லி தெரிந்தது ஞாபகம் இல்லையா....நாங்கள் மறக்கவில்லை...

    ReplyDelete

Powered by Blogger.