வெட்டு காயங்களுக்கு புதிய மருந்தை கண்டறிந்து, முஸ்லிம் மாணவிகள் சாதனை..!!
தென்னை மரத்தை பற்றி அறிந்தவர்கள் தென்னை மரமட்டையில் ஒரு வகை பொடிகள் இருப்பதையும் அறிந்திருப்பர். தென்னைமர மட்டையில் படிந்திருக்கும் இந்த பொடிகள் பற்றி எந்த மருத்துவரும் ஆராய்ந்திராத சூழலில் அந்த பொடியை பற்றி லட்சத்தீவை சார்ந்த இரண்டு மாணவிகள் ஆராய்ந்தனர்.
அந்த ஆய்வில் தென்னை மர மட்டைகளில் படிந்திருக்கும் துகள்களில் வெட்டு காயங்களுக்கு சிறந்த நிவாரணம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் அந்த பொடிகளில் நான்கு வகை பாக்டீரியாக்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவ உலகில் காயங்களுக்கு பயன்படுத்தப்படும் பீட்டாடின் என்னும் மருந்தை விட தென்னை மர மட்டையில் படிந்திருக்கும் பொடிகள் அதிகவேகத்தில் காயங்களை குணப்படுத்துவதாகவும் அவர்கள் நிரூபணம் செய்துள்ளனர்.
இவர்களின் ஆய்வுகளை பாராட்டி டெல்லி ஐஐடியில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு அந்த மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் அமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் அந்த மாணவிகள் பெற்றுள்ளனர்.
TMM
Our Irakkamam village people already using this method and I know this in my little years anyway it's appreciable
ReplyDeleteWHY NOT MENTION TWO GIRLS ARE NAME....................
ReplyDeleteYes Mohammed Ansar....Why not mention those girls names and their parents name and school name where they study.....??? which is more proud to be.....
ReplyDelete