எலி + நாயினால் தாமதமான விமானங்கள், மாற்று விமானங்களில் பறந்த பயணிகள்
எலி மற்றும் நாய் தொல்லை காரணமாக இன்று இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்ட இரு ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
சம்பவம் 1
இது நடைபெற்றது மும்பை சர்வதேச விமான நிலையத்தில்..
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டிரிம்லைனர் விமானம் 240 பயணிகளுடன் இன்று காலை 7 மணிக்கு மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது.
விமானம் டெகரான் வான்பகுதியில் பறந்தபோது, விமானத்தின் உணவு விடுதியில் சுற்றி திரிந்த எலி ஒன்றை ஊழியர் ஒருவர் தற்செயலாக கவனித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து துறை வகுத்துள்ள விதிமுறையின்படி, விமானி மும்பை விமான நிலையத்தை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த விமானம் பயணத்தை பாதியிலே ரத்து செய்துவிட்டு, மும்பை திரும்பியது. பிற்பகல் சுமார் 12.25 மணியளவில் மும்பை விமானம் வந்தடைந்தது.
பின்னர் விமானம் தொலைவான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பூச்சிகள், சிறு விலங்குகளை நீக்கும் வகையிலான வாயு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திருப்பி அழைக்கப்பட்டது. விமானப் பயணிகள் வேறு விமானத்தில் லண்டன் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றார்.
சம்பவம் 2
இது நடைபெற்றது அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில்..
இன்று பிற்பகல் 3.10 மணிக்கு 171 பயணிகளுடன் ஏர் இந்தியா இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபைக்கு புறப்பட்டது.
விமானம் ஓடுதளத்திலிருந்து பறப்பதற்கு தயாரான போது, விமானத்தின் முன்சக்கரம் முன்பு திடீரென்று ஒரு நாய் ஓடிவந்தது.
செய்வது அறியாத திகைத்த விமான, 'அவசர பிரேக்'கை அழுத்தி விமானத்தை நிறுத்தினார். பின்னர் விமானத்தை மீண்டும் இருப்பிடத்துக்கே கொண்டு வந்துவிட்டார்.
இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இருப்பிடத்துக்கு வந்த பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கவிடப்பட்டு, விமானம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு இரவு 7.13 மணிக்கு மீண்டும் துபை புறப்பட்டு சென்றது.
Post a Comment