Header Ads



கல்­லெ­றிந்து கொல்லும் மரணதண்­டனை, மூன்று வருட சிறைத்­தண்­ட­னை­யாக மாற்­றம்

சவூதி அரே­பி­யாவில் தவ­றான பாலியல் உறவைப் பேணிய குற்­றச்­சாட்டின் பேரில் இலங்கைப் பணிப் பெண் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட கல்­லெ­றிந்து கொல்லும் மரணதண்­டனை தீர்ப்பை அந்­நாட்டு நீதி­மன்றம் மூன்று வருட சிறைத்­தண்­ட­னை­யாக மாற்­றி­ய­மைத்­துள்ள­தாக இலங்கை வெளிவிவகார அமைச்சும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சும் நேற்று அறிவித்தன.

கல்­லெ­றிந்து கொல்லும் தண்­ட­னை­யி­லி­ருந்து குறித்த பெண்ணைக் காப்­பாற்றும் வகையில் இலங்கை அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வந்த முயற்­சி­களின் பல­னாக இத் தீர்ப்­பினை மீள்­ப­ரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­திய சவூதி அரே­பி­யாவின் தவாத்மி நீதி­மன்றம் நேற்றுமுன்­தினம் அதனை மூன்று வருட சிறைத் தண்­ட­னை­யாக குறைத்­துள்­ள­தாக அமைச்­சர்கள் நேற்று தெரி­வித்­தனர்.

குறித்த இலங்கைப் பணிப் பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றார். அந்த வகையில் அவர் ஏற்­க­னவே ஒன்­றரை வரு­டங்­களை சிறையில் கழித்­து­விட்டார். எனினும் தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள 3 வருட சிறைத்­தண்­ட­னையில் மேற்­படி ஒன்­றரை வரு­டங்கள் கழிக்­கப்­ப­டுமா அல்­லது அவர் நேற்று முன்­தினம் தீர்ப்பு வழங்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து 3 வரு­டங்கள் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டுமா என்­பது இது­வரை தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் எதிர்­வரும் திங்கட் கிழமை எமக்கு தெளி­வான தகவல் கிடைக்கும் என நம்­பு­கிறோம்.

இவ்­வா­றான ஒரு தீர்ப்பு மீள்­ப­ரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு மாற்றி வழங்­கப்­பட்­டமை வர­லாற்றில் இதுவே முதல் முதல் தட­வை­யாகும். இலங்­கைக்கும் சவூதி அரே­பி­யா­வுக்­கு­மி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உறவு மிகவும் வலு­வாக உள்­ளது என்­ப­தையே இந்தத் தீர்ப்பு வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. இதற்­காக உழைத்த வெளி விவ­கார அமைச்சின் அதி­கா­ரிகள், வெ ளிநாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சின் அதி­கா­ரிகள், சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூதுவர் அஸ்மி தாஸிம், சவூதி அரே­பிய சட்­டத்­த­ர­ணிகள் ஆகி­யோ­ருக்கு நாம் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம்.

இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் மிகக் கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூதுவர் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்டார். எனினும் அவர் இது பற்றி அலட்டிக் கொள்­ளாது குறித்த பெண்ணை தண்­ட­னை­யி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டுள்ளார். அதற்­காக நாம் தூதுவர் அஸ்மி தாஸி­முக்கு விசேட நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம் என்றார்.

3 comments:

  1. குறிப்பிட்ட செய்தி சம்பந்தமான சில குறிப்புகள்
    நான் ரியாத் நகரில் வசிக்கின்றேன் மொழிபெயர்பாளர் சில போது மொழிபெயர்புக்காக நான் மற்றும் வேறு சிலரும் ரியாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுவோம் நீதிமன்றம் தான் எம்மை அழைக்கும்
    என் அனுபவத்தில் இ|து முதல் தடவையல்ல முதலாவது இங்கு நடைமுறையில் உள்ள சட்டத்தை அறியவேண்டும்
    குற்றங்கள் இரு வகை ஒன்று மனிதன் மனிதனுக்கு செய்த குற்றம் இதை பாதிக்கப்பட்ட மனிதன் தான் மன்னிக்க வேண்டும் இதற்கு உதாரணமாக ரிஸானா நபீகின் விடயத்தை கவனிக்கலாம்
    இதில் குற்றத்iதை ஒப்புக் கொண்ட பின் மறுக்க முடியாது
    இரண்டாவ|து அல்லாஹ்வுக்கு செய்யும் குற்றங்கள் உதாரணமாக விபச்சாரம் இதை மனிதனால் மன்னிக்க முடியாது யாருக்கும் அதில் அதிகாரம் இல்லை அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் அதில் அதிகாரம் இருக்கின்றது ஆனால் அதற்கு தண்டனை கொடுப்பது ஒன்று நான் சாட்சிகள் விபச்சாரம் செய்வதை கண்ணால் கண்டதாக சாட்சி கூறவேண்டும் அல்லது அவராக ஒப்புக் கொள்ள வேண்டும் ஆனால் ஒருவர் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பின் அதை மறுத்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் அதனால் உலகில் தண்டனை பெறுவதை விட்டும் அவர் தப்புவார் ஆனால் மறுமையில் தப்ப மரணத்துக்கு முன் அல்லாஹ்விடம் முறையாக பவமன்னிப்பு கோற வேண்டும்
    இவ்வாறு சட்டம் தெரியாமல் ஏற்றுக் கொண்ட எவ்வளவே நபர்கள் அவர்களுக்கு உணர்த்தியதன் பின் தமது ஒப்புதலை மறுத்து தண்டனையில் இருந்த தப்பியிருக்கின்றார்கள் நான் செல்வது எமது இலங்கையைச் சேர்நதவர்கள் இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் விபச்சாரம் செய்துவிட்டேன் எனக்கு தண்டனை நிறை வேற்றுங்கள் என கூற இல்லை நீர் வேற ஏதும் செய்திருப்பாய் என்று நபி ஸல் அவர்கள் அவரை திருப்ப பார்த்தார்கள் ஆனால் அவர் தனது குற்றத்தை தொளிவாக ஒப்புக் கொண்டு அதில் உறுதியாக இருந்ததனால் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

    ReplyDelete
  2. Ma Sha Allah Bro Riflan! நல்லதொரு விடயமொன்றை கூறினீர்கள். சுயபுத்தியுடன் நேர்மையாக சிந்தித்தால் இஸ்லாம் எவ்வளவு தூரம், Individual Respect ai பாதுக்கக்கிறது என்பது அந்த ஹதீஸ் ஒரு எடுத்துக்காட்டு.

    ReplyDelete
  3. நிட்சியமாக அஸ்மி தாஸிமின் திறமைக்கு எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். நல்லதொரு விடயத்தை பகிர்ந்து கொண்ட ரிப்ளானுக்கும் எமது நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.