Header Ads



றிசாத்திற்கு எதிரான பிக்குகளின் ஆர்ப்பாட்ட, வீடியோக்களை வழங்க நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனை அவ­ம­திக்கும் வகையில் தேசிய சங்க சம்­மே­ளனம் உட்­பட பல அமைப்­புகள் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்டம், பேச்­சுகள் அடங்­கிய வீடியோ காட்­சி­களை கறுவாத் தோட்ட பொலி­ஸா­ருக்கு வழங்­கு­மாறு தொலைக்­காட்சி நிறு­வ­னங்­க­ளுக்கு கொழும்பு மேல­திக நீதிவான் அருணி ஆட்­டி­கல உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

 கறுவாத் தோட்டப் பொலி­ஸாரின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­யவே நீதி­வா­னினால் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் கறு­வாத்­தோட்ட பொலிஸில் ஆனந்­த­சா­கர தேர­ருக்கு எதி­ராக செய்­துள்ள முறைப்­பாடு   தொடர்பில் சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­ள­வுள்­ள­தா­கவும் கறு­வாத்­தோட்ட பொலிஸார் நீதி­வா­னிடம் தெரி­வித்­தனர்.

கொழும்பு விக்­டோ­ரியா பூங்­கா­வி­லி­ருந்து தாமரைக் தடாகம் வரை 19 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்றில் தனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­படும் வகையில் தேசிய சங்க சம்­மே­ள­னத்தின் செய­லாளர் பாஹி­யங்­கல ஆனந்த சாகர தேரர் கருத்து வெளி­யிட்­டுள்ளார் என அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் அன்­றைய தினமே பிற்­பகல் கறு­வாத்­தோட்ட பொலிஸில் முறைப்­பா­டொன்­றினைச் செய்­தி­ருந்தார்.

ஆனந்த சாகர தேரர் தனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் தான் போதைப் பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் விநி­யோ­கத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் வில்­பத்து வன பிர­தே­சத்தில் காட­ழித்து முஸ்­லிம்­களை அங்கு சட்ட விரோ­த­மாக குடி­யேற்றி வரு­வ­தா­கவும் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

இந்­நாட்டின் சில இன­வாத குழுக்கள் தன்னை இலக்­காகக் கொண்டு தன்னை இன­வா­தி­யாக சித்­தி­ரித்து இனத்­து­வே­சத்தைப் பரப்பி வரு­கின்­றன. மீண்டும் இனக்­க­ல­வரம் ஒன்­றினை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன அதனால் இது தொடர்பில் விசா­ர­ணை­யொன்­றினை நடத்தி அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் கறு­வாத்­தோட்ட பொலிஸில் முறை­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனந்த சாகர தேரரின் கருத்­துகள் தண்­டனைச் சட்­டக்­கோவை 120 ஆம் பிரிவின் கீழ் குற்றச் செய­லாகும் என பொலிஸார் தெரி­வித்­தனர். இதே­வேளை அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­வித்­த­மைக்கும் பொய்ப்­பி­ர­சா­ரங்­க­ளுக்கும் ஆனந்த சாகர தேரர் 100 கோடி ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்­டு­மென சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக கோரிக்கைக் கடிதம் (Letter of Demand) அனுப்பி வைத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

No comments

Powered by Blogger.