Header Ads



இஸ்லாமிய நாடுகளுடன், அமெரிக்காவிற்கு இருக்கும் நல்லுறவு பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சால் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டு வருகிறனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டிற்குள் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் கருத்து கூறி வருவது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் நேற்று இரவு தொலைக்காட்சில்யில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய ஹிலாரி, ‘இஸ்லாமியர்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் பேசி வருவது இஸ்லாமியர்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதன் விளைவாக, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு இஸ்லாமியர்களிடையே ஆதரவு பெருகி வருவதாக ஹிலாரி குற்றம் சாட்டியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் பேச்சின் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நபர்களை சேகரிக்கும் பணியை டொனால்ட் ட்ரம்ப் செய்து வருவது போல் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹிலாரி ஒரு ஆதாரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ‘அமெரிக்க நாடு இஸ்லாமியர்களுக்கு எதிரான நாடு என்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி வரும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமியர்களை தூண்டும் விதத்தில் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த கடுமையான பேச்சால், இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்காவிற்கு இருக்கும் நல்லுறவிற்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து பயங்கரவாததிற்கு எதிராக போரிட முடியாத சூழலை டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்தி வருவதாக ஹிலாரி கிளிண்டன் அந்த விவாத நிகழ்ச்சியில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.