Header Ads



புல்மோட்டை பிரதேச காணிகளை, கபளீகரம் செய்யும் பௌத்த பிக்கு

புல்மோட்டை பொன்மலைகுடா அரிசிமலை பிரதேசத்தில் NEHRP நிறுவனத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 2004 ஆண்டில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் கடந்த 2013 முதல் கடற்படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மூன்று வீடுகளில் ஒன்று விடுவிக்கப்பட்ட நிலையில் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள அரிசிமலை கந்த புராண பெளத்த விகாராதிபதி பனாமுற திலக வம்ஸ கடற்படையின் கட்டுபாட்டில் உள்ளபோதே,

குறித்த வீட்டு உரிமையாளர் காலித் என்பவரின் வீட்டில் கண்டி பிரதேசத்திலிருந்து சிங்கள நபர் ஒருவரை கொண்டுவந்து,அமர்த்துவதற்காக குறித்த வீட்டில் உரிமையாளரின் அனுமதியின்றி சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டநிலையில் உரிமையாளர் தனது குடும்பத்துடன் கடந்த 02.12.2015 ம்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் முயற்சியினால் குறித்த வீட்டுக்குள் மீள குடியமர்ந்தார்

குறிப்பிட்ட விடயமாக மாவட்ட செயலாளர் புஸ்பகுமார கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ உட்பட பலரின் கவனத்திற்கு கொண்டு கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்/.அன்வரினால் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கும் தருவாயில்,

குறித்த பெளத்த குருவால் 02.12.2015 திகதி இடப்பட்ட ஜனாதிபதிக்கு விலாசமிடபட்டு கிழக்கு மாகாண கிழக்கு மாகாண ஆளுனர், திருமலை மாவட்ட செயலாளர்,கடற்படை தளபதி பாதுகாப்பு அமைச்சு,குச்சவெளி பிரதேச செயலாளர் போன்றோருக்கு பிரதிகள் இடப்பட்டும் இனவாதத்தை தூண்டுகின்ற கடிதம் ஒன்று அனுப்பிவைக்கபடுள்ளது

குறித்த சிங்கள மொழி கடிதத்தின் தமிழ் ஆக்கம் கீழே

அதிமேதகு ஜனாதிபதி
கொழும்பு
2015/12/02.

இனவாத நோக்குடன் ஆக்கிரமிக்கபட்டுள்ள விகாரைக்கு சொந்தமான இடத்தினை மீட்டுதரக் கோரல்

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் புல்மோட்டை கிராமத்தில் பௌத்தர்களின் புனித தளமான ஆசிரிகந்த புராதன விகாரைஅமைந்துள்ளது

எமதுவிகாரையானது வரலாற்றில் 1970/80 காலப்பகுதியில் கௌரவ சிறில்மேதேவு அமைச்சர் அவர்கள் மூலம் எகல எனும் தலைமை பிக்கு மூலம் அடையாளம் காணப்படது அவ்வாறு அடையாளம் காணபட்ட பிரதேசங்களில் இருந்து யுத்தத்தினால இடம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியில் புனிதபூமியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் அனாவசியமாக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது, அவை எவருக்குமோ அல்லது நிறுவனத்துக்கோ,வழங்கப்பட வில்லை குறித்த இடங்களுக்கு அனுமதி பத்திரங்களோ அல்லது ஒப்பாமோ யாருக்கும் வழங்கப்படவில்லை

மேலும் குறித்த விடயம் தொடர்பாக அப்பகுதியில் நிர்மாணிக்கபட்ட கட்டடங்களை இனவாத அரசியலில் ஈடுபடும் ஒருவரால் வேண்டுமென்றே வேறு பிரதேசங்களில் காணி மற்றும் விவசாய நிலங்கள் உள்ளவர்களுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்

இங்கு அமைக்கபட்டுள்ள கட்டடங்களில் ஒன்றை எமது விகாரையின் தர்ம மண்டபமாக பாவித்து வருவதுடன் ஏனைய இரண்டு கட்டடங்களை கடற்படையினர் பராமரித்து வருகின்றனர்

அத்துடன் விகாரை நிலையத்துக்கு தானங்கள் வழங்குவதற்கு வேறு எந்த சிங்கள பௌத்தர்கள் இல்லாத நிலையில் அருகில் அமைந்துள்ள கடபடையினர் மூலம் தானங்கள் வழங்கப்படுகின்றது

குறித்தபிரதேசத்தில் இருக்கின்ற ஒரேயொரு தலைமைபிக்குவும் ஏனையபிக்குவும் வெவ்வேறு சந்தர்பங்களில் இந்த இனவாத பிரிவினரால் பலவிதமான நடவடிக்கைகள் மூலம் விகாரைக்கு அருகில் இருக்கின்ற எமக்கு உதவிஅளிக்கின்ற கடற்படையினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கின்றனர்

அவ்வாறு வெளியேற்றப் பட்டால் இங்கு இருக்கின்ற பெளத்த பிக்குகள் வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

எனவே விகாரைக்கு அருகில் தர்மசாலாவாக பயன்படுத்தப்படும் இடத்தினையும் விகாரைக்கு பாதுகாப்பாக இருக்கும் இரு கடற்படையினர் தங்கும் கட்டங்களையும் எமக்கு பெற்றுத் தரும்படி பொறுப்புவாய்ந்த தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்

பிரதி: பாதுகாப்புஅமைச்சு
வைஸ் அட்மிரல் கடற்படை
கௌரவ ஆளுனர்
அரசாங்க அதிபர்

No comments

Powered by Blogger.