Header Ads



சிங்கள இனவாத பிரச்சாரங்களுக்கு, இலவச உரமிடும் முஸ்லிம்கள்

-Abu Ahmed-

அழ்ழாஹ்வுக்காக பொறுமை செய்யுங்கள், இன்ஷா அழ்ழாஹ் நாம் வெல்வோம்

சிங்கள இனவாத சக்திகளின் சமூக வலைப்பிரச்சாரங்களுக்கு உரமிடுபவர்களாகவும், உந்தக சக்தியாகவும், இலவச பிரச்சாரகர்களாகவும் முஸ்லிம்களே இருப்பது மிகவும் கவலைக்குரியவிடயமாகும்.     

       இலங்கையில் சிங்கள இனவாத சக்திகளின் செயற்பாடுகளால் அவர்கள் இதுவரை எதையும் சாதித்ததுகிடையாது. இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் ஒரு கூட்டமே. இன்ஷா அழ்ழாஹ், எதிர்காலத்திலும் இவர்கள் எதனையும் சாதிக்கப்போவதில்லை. கடந்த ஆட்சியின்போது, இனவாத சக்திகளின் செயற்பாடுகளால் சில சொத்துக்களினதும், உயிர்களினதும் இழப்புக்கள் நமக்கு ஏற்பட்டாலும், நமது பொறுமையாலும், துஆக்களினாலும், எல்லாம் வல்ல இறைவன் எவரும் நினைத்துப்பார்த்திடாத வகையில், புனித அல்குர்ஆனில் வாக்களித்தது போன்று தான் நாடியவருக்கு ஆட்சியை கொடுத்துவிட்டான்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதைப்பற்றி யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளும், உலமாக்களும், முஸ்லிம் சமூகத்தலைவர்களும் ஒன்றிணைந்து கேட்டிருந்தாலும்கூட நாம் இவ்வாறு ஒற்றுமைப்பட்டிருக்கமாட்டோம். இந்த இனவாத சக்திகளின் செயற்பாட்டால் நமக்கு இறைவன் நாடியிருந்த மற்றுமோர்விடயம் நமது ஒற்றுமையாகும். அதுமட்டுமன்றி, சமூக சேவைகளில் முஸ்லிம்கள் இன்று அதிகமாக பங்குபற்றக்கூடிய நிலமையும் தற்போது காணக்கூடியதாக உள்ளது.

கடந்த ஜனவரியில் நடந்த ஆட்சி மாற்றத்தில் நமது பங்களிப்பும், நமது பலமும் மிகப்பெரிய பங்காக இருந்தது. ஆனால் நாம்தான் இன்னும் நமது பலத்தையும், ஈமானின் பெறுமதியையும், படைத்த றப்பு நம்முடன் இருக்கின்றான் என்பதையும் விளங்காத கோழைகளாக இருக்கின்றோம். சோதனைகள் வரும்போதெல்லாம் நம்மிடம் ஏதோ தவறுகள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதோடு, பாவமன்னிப்புடன் இறைவனின் பக்கம் மீழ முயற்ச்சிக்க வேண்டும். இதைவிட்டுவிட்டு, சமூக வலைத்தளங்களில் இறைவன் கொடுத்த மிகப்பெறுமதிமிக்க காலத்தை வீனடித்துக்கொண்டு, படைத்தவனைப்பற்றி சிறுதளவேனும் அறிவில்லாத இனவாதிகளுக்கு பதிலளிப்பதிலும், அவர்களின் இனவாதக்கருத்துக்களுக்கு உயிரூட்டுபவர்களாகவும் இருக்கின்றோம். 

இது முற்றிலும் இஸ்லாத்திற்க்கு மாற்றமானதாகும். இவ்வாறான இனவாத செயற்பாடுகளை இவர்கள் தொடங்கும் போது, யாரோ இதற்க்கு பணம் வழங்குகின்றார்கள், அத்தோடு இதன்மூலம் ஒருவர் தனக்கு சாதகமான விடயத்தை அடைய முயற்ச்சிக்கின்றார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் கடந்த வருடம் செயற்ப்பட்ட அதேமுறையில்தான் இம்முறையும் இந்த இனவாத சக்திகள் செயற்படுகின்றார்கள். இன்ஷா அழ்ழாஹ், இதில் இவர்கள் எந்தவித வெற்றியும் அடையமாட்டார்கள். இவர்கள் உண்மையிலேயே நாட்டுப்பற்றுடனும், தங்களது இனத்தின் மேலுள்ள பற்றுடனும் செயற்படுபவர்களானால் இந்தநாடு ஏன் இன்று இவ்வாறான பொருளாதார நிலையில் இருப்பதோடு இலட்சக்கணக்கான பெண்கள் வெளிநாடு செல்லவேண்டும். இந்தநாட்டில், மதுபானமும், போதைப்பொருட்களும் பாவனையில் உள்ளது போன்று ஆசியாவில் வேறு எந்தநாட்டில் உள்ளது.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரையும் மிகப்பொறுமையோடு இருக்குமாறும், இந்த இனவாதக் கூட்டத்தை கையாளும் விடயத்தை நமது சமூகத்தலைவர்களிடமும், உலமாக்களிடமும் விட்டுவிடுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் பக்கம் மீழுவதிலும், பாவமன்னிப்பு தேடுவதிலும், நிதானத்துடனும், பொறுமையுடனும் செயற்படுவதிலும்தான் நமது வெற்றி தங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  

1 comment:

  1. For Sure we, muslims have to boycott all social medias.That will be a good lesson for them.Social medias also like alcohol;Though it has little benifit,it has more disadvantages,so that it should be prohibited.

    ReplyDelete

Powered by Blogger.