தந்தை புதிய கட்சி ஆரம்பித்தால், நானும் இணைந்துகொள்வேன் - நாமல் ராஜபக்ச
நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் தானும் அதில் இணைந்து கொள்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக சென்றிருந்த நாமலிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் தனது தந்தை புதிய கட்சியை ஆரம்பித்தால் தானும் அதில் இணைந்து கொள்ள போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி கொள்வதற்காக வலுவான எதிர்க்கட்சி என்ற வகையில் போராடப் போவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

You can start the Mahinda Rajapaksha's extremist Front. Select the president Mahinda, Secretary Gotha, Treasurer Basil, Youth wing president Namal, Ladies wing President Siranthi
ReplyDelete