வசிம் தாஜூடீனின் படுகொலை, கண்ணால் கண்ட சாட்சி தலைமறைவு
ரக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் படுகொலை தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு முன்வந்த கண்ணால் கண்ட சாட்சியொருவர் தலைமறைவாகி உள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் ராஜபக்ச குடும்பத்தினரிற்கு நெருக்கமானவர் எனவும் அவர் மீது பல மோசடிகள் உள்ளதாகவும், அவர் புதிய அரசாங்கம்பதவியேற்றதை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடி லண்டனில் தஞ்சம புகுந்துள்ளார்.
எனினும் பின்னர் ரக்பி வீரர் படுகொலைதொடர்பாக முக்கியதகவல்களை வழங்குவதற்கு இணங்கிய அந்த நபர் இலங்கைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ரக்பிவீரர் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகும் அவருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்துள்ளனர்.
எனினும் கடந்த இரு வாரங்களாக அவருடைய தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது, அவர் தடயங்கள் எதுவுமின்றி காணமற்போயுள்ளார்.
Good reason to bury under the carpet.
ReplyDelete