வஸிம் தாஜுதீன் கொலை விவகாரத்தில், என்மீது அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது - யோஷித்த ராஜபக்ஸ
கொட்டதெனியாவ சிறுமி சேயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொண்டயாவின் நிலை தனக்கும் ஏற்பட்டுள்ளதாக யோஷித்த ராஜபக்ஸ அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிறுமி சேயாவின் கொலைச்சம்பவத்தில் கொண்டயா அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டது போன்றே தான் வஸிம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக யோஷித்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
அதாவது, கையெழுத்துப் போடக் கூடத் தெரியாத எழுத வாசிக்கத் தெரியாத கொண்டயாவும், இங்கிலாந்தில் படித்த நானும் தற்போது ஒரே நிலையில் குற்றம் சாட்டப்படுகின்றோம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள யோஷித்த , சிறுமி சேயாவின் கொலைச்சம்பவத்தில் கொண்டயா நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பின் அவரது அண்ணன் மீது குற்றம் சுமத்தப்பட்டது போன்றே தற்போது தனது அண்ணன் நாமல் ராஜபக்ஸவையும் வஸிம் தாஜுதீன் வழக்கில் சிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக யோஷித்த குற்றம் சாட்டியுள்ளார்.
எதுவித குற்றமும் செய்யாத தங்களுக்கு எதிராக ஊடகங்களே குறித்த பிரச்சாரங்களை முன்னெடுப்படுதாகவும் , எனினும் நீதித்துறையின் மூலம் தமக்கு விடுதலை கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் யோஷித்த தெரிவித்துள்ளார்.
பாவம் இந்த அப்பாவி குடும்பத்தை கஷ்டத்துக்குள் தள்ளிக்கொண்டு இருகின்றார்கள். கொண்டையா படிக்கதவந்தான் அதனால்தான் அவன் உடன் கைது செய்யப்பட்டான். நீங்களோ படித்த மேதைகள் அதனால்தான் எல்லா சாட்சியங்களையும் அளிக்க முயற்சி செய்தீர்கள், செய்து கொண்டு இருகின்றிர்கள்......
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், விரைவில் முடிவு தெரியும்....
Thoppi Thalaila
ReplyDeleteThis is a great dishonour to Kondaya
ReplyDeleteஆமாம், இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் பிரபாகரன் மீதும் அநியாயமாக பழி போடப்பட்டது என்றும், ஹிட்லர் மீது இரண்டாம் உலக யுத்தம் தொடர்பில் அநியாயமாக பழி போடப்பட்டுள்ளது என்றும் சேர்த்துக்கோ.....
ReplyDelete