Header Ads



முஸ்லிம் சிறுவனுக்கு எதிராக, இட்டுக்கட்டிய ஆசிரியர் வசமாக மாட்டினார்

பாரிசில் ஆசிரியர் ஒருவரை ஐ.எஸ்.ஆதரவாளர் தாக்கிவிட்டு தப்பியதாக எழுந்த புகாரில், திடீர் திருப்பமாக நடந்த சம்பவத்தை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

பாரிசின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Jean Perrin d'Aubervilliers பள்ளியில் பணிபுரியும் 45 வயதான ஆசிரியர் ஒருவரை, ஐ.எஸ்.ஆதரவாளர் தாக்கிவிட்டு தப்பியதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளியின் வளாகத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றதால் அரசு தீவிர கவனமெடுத்து வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பிரான்ஸ் வழக்கறிஞர்கள் சம்பவத்தின் உண்மை நிலையை வெளியிட்டு பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியரை ஐ.எஸ்.ஆதரவாளர் தாக்கியதாக கூறப்படுவது இட்டுக்கட்டிய கதை என அம்பலப்படுத்தியுள்ள வழக்கறிஞர்கள்,

ஆசிரியரே தம்மை காயப்படுத்திக்கொண்டு ஐ.எஸ்.ஆதரவாளர்கள் தாக்கியதாக நாடகமாடியதாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக, ஐ.எஸ்.ஆதரவாளர் தம்மை கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கியதாக ஆசிரியர் முறையிட்டுருந்தார்.

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் முன்னரே, காவல்துறையினர் சந்தேகம் எழுப்பியிருந்த்தாக கூறப்படுகிறது.

அட்டைப்பெட்டிகளை திறக்கும் கத்தி மற்றும் கத்திரிக்கோல் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது தீவிரவாத குழுவினரில் சற்றே மாறுபட்டது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதால் இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஐ.எஸ்.ஆதரவு வீடியோ ஒன்றில், அடுத்த இலக்கு கல்வி நிலையங்கள் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,

ஆசிரியர் மீது தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியானதும், பிரான்சின் கல்வி அமைச்சர் Najt Vallaud Belkacem சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் 45 வயதான அந்த ஆசிரியரிடம் இந்த விவகாரம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.