ஹிருனிக்கா சிக்குவாரா..? அரசாங்கம் மௌனம் காப்பதாக, உதய கம்மன்பில குற்றச்சாட்டு
தெமட்டகொடையில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா மற்றும் அவரின் 6 பாதுகாவலர்களின் கையடக்க தொலைபேசி பதிவுகளை தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயலொக் எக்ஸீடா நிறுவனத்துக்கு இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதிவான் பிறப்பித்துள்ளார்.
குறித்த கடத்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளையே மன்றில் சமர்ப்பிக்கவேண்டும் என்று டயலொக் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2
தெமட்டகொட பகுதியில் வைத்து இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் நல்லாட்சியையா எடுத்துக் காட்டுகிறது? அத்துடன் ஹிருனிக்கா சட்டத்தின் அப்பால் இருந்து செயற்பட்டுள்ளமையையும் இது காட்டுகிறது என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இன்று (23) உரையாற்றிய அவர், ஹிருனிக்காவின் பாதுகாப்பு வாகனத்தை கொண்டே வாலிபர் கடத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கடத்தப்பட்டவர் ஹிருனிக்காவின் அலுவலகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை ஒன்றுக்காக அவரை கடத்தி வந்து அறிவுரை கூறியதாக ஹிருனிக்கா ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் வேறு யாரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களை அரசாங்கம் கைதுசெய்திருக்கும்.
எனினும் ஹிருனிக்கா விடயத்தில் அரசாங்கம் மௌனம் சாதிக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்த வெள்ளை வான் கலாசாரத்தை கடந்த அரசாங்கமே இல்லாமல் ஒழித்தது. தற்போது டிபென்டர் கடத்தலை ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Post a Comment