ஹிட்லரின் புத்தகம் வருகிறது - யூதர்களிடையே சலசலப்பு
ஹிட்லரின் மெயின் கெம்ப் புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் ஜேர்மனியின் முடிவு யூதர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர் . இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், யூதர்கள் பற்றிய எண்ணம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளுடன் ”மெயின் கெம்ப்” என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார்.
அவரது ஆட்சிக்காலத்தில் அப்புத்தகம் பரவலாக விற்பனையானது. இந்நிலையில் அவரது மரணத்துக்கு பிறகு அப்புத்தகத்தை விற்பதற்கு நேச நாடுகள் தடை விதித்தது.
மேலும் புத்தகத்தின் பதிப்புரிமை ஜேர்மனியின் பவாரியா மாகாணத்திடம் இருந்ததால் புத்தகத்தை மறுபதிப்பு செய்ய தடை விதித்தது.
எனினும் இணையதளங்களிலும் ஒரு சில நாடுகளிலும் இப்புத்தகம் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் புத்தகத்தின் 70 ஆண்டு கால காப்புரிமை இம்மாத இறுதியுடன் முடிவதால் மெயின் கெம்ப் புத்தகத்தை மறுபதிப்பு செய்து விற்பனைக்கு கொண்டு வர ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
அந்நாட்டு பள்ளிகளிலும் இந்த புத்தகத்தை வைக்க பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் மெயின் கெம்ப் புத்தகத்தை மறு பதிப்பு செய்யும் ஜேர்மனி அரசாங்கத்தின் கருத்துக்கு யூதர்களின் மத்திய குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த புத்தகம் வரும் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
Post a Comment