அமெரிக்காவில் இலங்கையருக்கு விருது
அமெரிக்க தொலைத்தொடர்புகள் நிறுவனமான வெரிசோன் வருடாந்தம் நடாத்திவரும் Powerful Answers Award எனும் தொழிநுட்பப் போட்டியின் இறுதிச் சுற்றுவரை தெரிவான இலங்கையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் கனிந்து நானாயக்கார, நேற்றைய தினம் நிறைவுற்ற போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்று 5 லட்சம் அமெரிக்க டொலர் பரிசை வென்றுள்ளார்.
iHelmet எனும் இவரது தலைக்கவசக் கண்டுபிடிப்பானது, போக்குவரத்தின் போதான அவசர தகவல்கள், வேகக் கட்டுப்பாடு, தரிப்பிட தகவல் என பல்வேறு தகவல்கள் பரிமாற்றத்தைச் செய்யக்கூடிய சாதனத்துடன் கூடியது மாத்திரமன்றி குறைந்த விலையில் (115$) சந்தைப்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள்
ReplyDeleteமுஸ்லிம் ஆக இருந்திருந்தால், தலைப்பிலேயே போட்டு இருப்பீர்கள், ஆனால் அவர் அப்படி இல்லை என்றதும், இலங்கையர் என்று மட்டும்..... பெளத்தருக்கு விருது என்று போட மாட்டர்கள், ஆனால் முஸ்லிம் என்றால் மட்டும் முஸ்லிம் இற்கு விருது.....
ReplyDelete