அமெரிக்காவினுள் நுழைய, சரத் பொன்சேகா பகீரத பிரயத்தனம்
அமெரிக்கா செல்வதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட நிலையில், வதிவிடஉரிமை (கிறீன் காட்) அட்டைக்கு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீள விண்ணப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தனது மகள்களைப் பார்வையிடுவதற்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நுழைவிசைவுக்கு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், அவருக்கு அமெரிக்கத் தூதுரகம் நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவினுள் நுழைவதற்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது வதிவிட உரிமைப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.
அமெரிக்க வதிவிடஉரிமைப் பத்திரத்தைக் கொண்டிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சிறையில் இருந்த போது, அது காலாவதியாகியிருந்தது.
அதற்குப்பின்னர் அவர் அந்த வதிவிடஉரிமைப் பத்திரத்தைப் புதுப்பிக்கவில்லை.
நுழைவிசைவு மறுக்கப்பட்டதையடுத்து, தனது வதிவிட உரிமைப் பத்திரத்தைப் புதுப்பிக்குமாறு அமெரிக்கத் தூதுரகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
எனினும், வதிவிட உரிமை பத்திரம் புதுப்பித்தல் நடவடிக்கை அமெரிக்க தூதரகத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அமெரிக்காவிலேயே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதனால்,வதிவிட உரிமைப் பத்திரத்தைப் புதுப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்துக்கான பதிலை அவர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பதிலைப் பொறுத்தே அவர் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment