வயிற்றுக்காக உயிரையே, பணயம் வைக்கும் இக்பால் (வீடியோ)
ஒரு ஜாண் வயிற்றுக்காக அன்றாடம் தன் உயிரையே பணயம் வைக்கும் கழைக்கூத்தாடிகளில் ஒருவர்தான் இவரும். ஆனால் இவரது கதை கொஞ்சம் விசித்திரமானது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர் பெயர் இக்பால் ஜோகி(30). இவருக்கு 5 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள். இவர்களைக் காப்பாற்றுவதற்காக தன்னிடம் உள்ள மூக்கின் வழியாக பாம்பை விட்டு வாய் வழியாக அதை வெளியே எடுக்கும் திறமையை பயன்படுத்துகிறார். எந்த நொடியில் வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்க வாய்ப்பிருக்கும் இந்த கொடூர சாகசத்தைச் செய்துதான் கடந்த 12 வருடங்களாக தன் குடும்பத்தை கவனித்து வருகிறார் இக்பால். என்னதான் உயிரைப் பணயம் வைத்து இந்த சாகசத்தை செய்தாலும் அவருக்கு கிடைப்பது என்னவோ ஒரு நிகழ்ச்சிக்கு வெறும் 500 ரூபாய்தான்.
ஒரு முறை கல்லூரி மாணவர்கள் முன் இந்த சாகசத்தை செய்யும் போது, முக்கிலிருந்து வெளியே வந்த பாம்பு, இவரது உதட்டில் கடித்து 3 நாள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து பின் மீண்டார்.
தனது சாகசம் குறித்து இக்பால் கூறுகையில் “நான் பாம்பாட்டிகள் சமூகத்தைச் சேர்ந்தவன். இதை எல்லோராலும் செய்து விட முடியாது. இதை செய்வதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். என்னுடைய திறமையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். கண்டிப்பாக, இதில் உள்ள அபாயத்தைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் மக்கள் என் வாயிலிருந்து பாம்பு வெளியே வருகிறதா என்று ஆர்வத்துடன் காத்திருந்து, பாம்பு வெளியே வந்ததும் பாம்பும் நானும் உயிரோடு இருக்கிறோம் என்பது தெரிந்ததும் ஆர்ப்பரிப்பார்களே... அதுதான் என்னை மகிழ்ச்சியாக உணரச் செய்கிறது.” என்கிறார்.
Post a Comment