Header Ads



கற்பிக்கப்படாத பாடம், பரீட்சை எழுதிய மாணவர்களின் வேதனை

-Mohamed Aashiq-

ஹாடி தொழில்நுட்பவியல் கல்லூரி கணனி மட்டம் ஐந்தில் கற்கும் மாணவர்களுக்கு நேர்ந்த அவலம். படங்கள் முழுமையாக கற்பிக்கப்படாத நிலையில் பரீச்சைக்குத் தோற்றிய கொடூரம்...

அம்பாரை ஹாடி தொழிநுட்பவியல் கல்லூரியில் NVQ  LEVEL - 5 ICT மாணவர்களுக்கு ஒழுங்குற பாடங்கள் கற்பிக்கப்படாத நிலையில் அம்மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அப்பரீட்சையினை எதிர் கொள்ள முடியாமல் பாதியிலேயே பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் நேற்று 03.12.2015ம் திகதி இடம்பெற்றுள்ளது. 

குறித்த பாடநெறிக்கு பொருத்தமான விரிவுரையாளர்கள் இன்மையும் காலம் தாமதித்து கற்கை நெறி ஆரம்பிக்கப் பட்டமையுமே இதற்கு காரணம் என மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மாணவர்கள் நிருவாகத்திடம் எந்த முறைப்பாடுகளும் செய்யவில்லை காரணம் மாணவர்களிடம் இருந்து வரும் எந்த நியாமனா கோரிக்கைகளையும் நிருவாகத்தினர் செவி தாழ்த்தி கேட்பதில்லை அத்தோடு மாணவர்களிடம் சுமுகமான நிலையில் நிருவாகத்தின உறவாடுவதும் இல்லை என்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றது.

மாணவர்கள் எதேனும் ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்டினால் மாணவர்களின் வரவு போதாது மணவர்களுக்கு அக்கறை இல்லை என்ற நொண்டிச் சாட்டுக்களே நிருவாகத்தினரால் முன்வைக்கப்படுகின்றது மாணவர்கள் தட்டிக் களிக்கப்படும் நிலை அங்கு காணப்படுவதாகவும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

03.12.2015ம் திகதி பரீட்சை நடைபெற்ற System Design and Analyze என்ற பாட நெறிக்கு 04 பக்கங்களைக் கொண்ட ஒரே ஒரு கையேடு மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

குறித்த மாணவர்களுக்கு நடாத்தப்பட்டிருக்கும் 06 பாடங்களில் 03 பாடங்களே சிறப்பாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய பாடங்கள் மாணவர்களாலேயே சுயமாக மிகச் சிறமங்களுக்கு மத்தியில் இணையத்தின் உதவியுடன் கற்றுக் கொள்ளப்பட்டது என்ற ஒரு உண்மையை மாணவர்களிடம் கருத்துக் கோரிய போது எமக்கு அறியக் கிடைத்தது. 

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இயங்கிவரும் இந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் இந்த அசமந்தப் போக்கு முழு கிழக்கு மாகாண மக்களுக்கும் ஒரு சாபக்கேடாகும். மாணவர்களின் வாழ்க்கையோடு சவால் விடும் இந்த செயற்பாட்டிற்கு யார் பொறுப்புக் கூறப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மாணவர்களுக்கு தோற்ற முடியாமல் போன இந்த பரீட்சைக்கு ஹாடி நிருவாகமும் தொழிநுட்பக் கல்லூரித் திணைக்களமும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதே எமது கேள்வியாகும்.

டிப்ளோமா பாடநெறியினை நடாத்த ஹாடி நிருவாகம் தயார் இல்லையா? ஏனைய கல்லூரிகளில் மாணவர்கள் சிறப்பாக தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹாடி மாணவர்கள் மட்டும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? மாணவர்கள் தொடர்பில் வேறு ஏதும் பிரத்தியோக நோக்கங்கள் காணப்படுகின்றதா ஹாடி நிருவாகத்திற்கு? இதுவே பாதிக்கப்பட்ட மாணவர்கலின் உருக்கமான கேள்வியாக உள்ளது? 

இந்நிலை தொடருமானால் எதிர்வரும் மாணவ சந்ததியினருக்கு கற்றல் நடவடிக்கைகளை சிறப்பாகா முன்னொடுக்க முடியாது போகும். தற்சமயம் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்ற போதும் இந்த கல்லூரியில் தங்குமிட வசதியும் இல்லை என்பதுவும் குறிப்பிடத் தக்கது. 

No comments

Powered by Blogger.