சிரியாவில் ஹிஸ்புல்லாவின் முன்னணித் தலைவர், இஸ்ரேலின் ரொக்கட் தாக்குதலில் பலி
லெபனியக் குழுவான ஹிஸ்பொல்லாவின் முன்னணித்தலைவர் சமிர் குவண்டார் சிரியத்தலைநகர் டமாஸ்கஸ் நகரில் கொல்லப்பட்டார்.
ராக்கெட் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்திருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தாம் விசாரித்துவருவதாக சிரியா தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ் நகரின் ஜரமன மாவட்டத்தில் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின்மீது ராக்கெட்டுகள் தாக்கியதில் சமிர் குவண்டார் கொல்லப்பட்டார்.
நான்குபேர் கொல்லப்பட காரணமாக இருந்த தாக்குதலில் இவருக்குஇருந்ததாகக் கூறப்படும் தொடர்புக்காக சமிர் 30 ஆண்டுகளை இஸ்ரேலிய சிறையில் கழித்தார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு ஹெஸ்பொல்லா அமைப்பால் கடத்தப்பட்ட இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரின் சடலங்களுக்கு பதிலாக சமிர் குவண்டார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரது மரணத்தை இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வரவேற்றிருந்தார். ஆனால் இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலை மேற்கொண்டதா என்பது குறித்து அவர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
Alhamdullillah both are islamic enemies
ReplyDelete