Header Ads



யூதர்­க­ளி­ட­மி­ருந்து இலங்கை முஸ்­லிம்­க­ளை, பாது­காக்க வேண்டும் - பெளசி

-ARA.Fareel-

இலங்­கையில் நிறு­வப்­பட்­டி­ருக்கும் இலங்கை- பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்கம் இலங்­கைக்கும்  இஸ்­ரே­லுக்­கு­மி­டையில்  வலுப்­பெற்­று­வரும் இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்கு கட்­டுப்­பாடு விதிக்க வேண்டும்.

யூதர்­க­ளி­ட­மி­ருந்து இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கும் வகையில்  தனது செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் என தேசிய ஒரு­மைப்­பாடு இரா­ஜாங்க அமைச்சர் எ.எச்.எம்.பெளசி தெரி­வித்தார்.

அமைச்சர்   ராஜித சேனா­ரத்­னவின் தலை­மையில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் இலங்கை- பலஸ்­தீன பாரா­ளு­மன்ற  நட்­பு­றவுச் சங்கம் தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், தற்­போது உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் இலங்­கை-­ப­லஸ்­தீனர் பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்கம் இலங்­கைக்கும் பலஸ்­தீ­னுக்­கு­மி­டையில் கல்வி, கலா­சாரம், தொழில்­நுட்பம்,  பொரு­ளா­தாரம் என்­ப­ன­வற்றை அபி­வி­ருத்­தி­ய­டையச் செய்­வ­தற்­கா­கவே நிறு­வப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை  இந்த பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்கம் இலங்­கைக்கும் இஸ்­ரே­லுக்­கு­மி­டையில் வலுப்­பெற்­று­வரும் உற­வு­க­ளுக்கு எதி­ராக  குரல்  கொடுக்க வேண்டும்.

கடந்த காலங்­களில் இலங்­கைக்கு யூத சங்­கத்­தினர் மற்றும் இஸ்ரேல் தூதுக்­கு­ழு­வினர் வரு­கை­தந்து அமைச்­சர்கள் சில­ருடன்  பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­ய­தாக செய்­திகள் வெளி­வந்­தன.

இலங்­கை­யுடன்  யூதர்­களும் இஸ்­ரே­லி­யர்­களும் தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­திக்­கொள்­வது இலங்கை முஸ்­லிம்­களைப் பாதிப்­ப­தாக அமையும். பலஸ்­தீ­னத்­திலும் ஏனைய இஸ்­லா­மிய நாடு­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வரும் இஸ்­ரே­லி­யர்­க­ளையும், யூதர்­க­ளையும்,  நாட்­டுக்குள் அனு­ம­திப்­பதை முஸ்­லிம்கள் ஒரு போதும் விரும்­ப­வில்லை.

முஸ்­லிம்கள் தமக்கு பாது­காப்பும், சமய உரி­மை­க­ளுக்கு உத்­த­ர­வா­தமும் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன  மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆட்­சி­ய­மைக்க ஆணை வழங்­கி­னார்கள்.

முஸ்லிம் அர­சியல்  தலை­வர்கள் கட்­சி­பே­த­மின்றி இஸ்ரேல்  தூதுக்­கு­ழு­வி­ன­ரதும், யூத சங்­கத்­தி­ன­ரதும் இலங்கை வரு­கைக்கு எதிர்ப்புத் தெரி­விக்க வேண்டும். அர­சாங்­கத்­திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க  வேண்டும்.

 இலங்கை பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தில் அமைச்சர் ரிசாத் பதியூதீனும், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்  ரஹ்மானும் அங்கம் பெற்றுள்ளனர்.

அவர்கள் இது தொடர்பில் திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.