Header Ads



"இது போன்றதொன்றை பார்த்ததில்லை - மஹிந்த

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவு- செலவுத்திட்டம் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

தான், இதற்கு முன்னர் இது போன்றதொரு வரவு- செலவுத் திட்டத்தைத் பார்த்தில்லை எனவும் இது இந்த அரசாங்கத்தின் செயற்றிறனின்மையைக் காட்டுகின்றது எனவும் இதனால் இவ்வரவு- செலவுத் திட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன்,  2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தியமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார். 

1 comment:

  1. Dear Mahinda MP

    can you tell frankly did you reduce prices of any goods in your 10 budget?? 2005-2014.

    Then why are you cheating the Public?

    Please be silent. We will see our problems. Ok

    ReplyDelete

Powered by Blogger.