Header Ads



ரிசாத் பதியுதீன் மீது பௌத்த தேரர்கள், பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு உலமா கட்சி கண்டனம்

அமைச்சர் ரிசாத் பதியுதீன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார் என்பது பொலிசுக்கோ இராணுவத்துக்கோ தெரியாத நிலையில்  கௌரவ ஆனந்த சாகர தேரருக்கு மட்டுமே இது தெரியும் என்றால் அவரும் அமைச்சருடன் இணைந்து போதை வஸ்த்து வியாபாரத்தில் ஈடுபட்டதனாலேயே அவருக்கு மட்டு; இது தெரியுமா  என முஸ்லிம் உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

டயஸ் போராக்களின் பணத்துக்கு அடிமையான சில இனவாதிகளுக்கு இன்று வில்பத்து பற்றி பேசுவதே வழக்கமாகிவிட்டது. வில்பத்துவில் எத்தகைய அத்துமீறிய குடியேற்றமும் இல்லை என அரச அறிக்கைகள் தெளிவாக சொல்லும் போது ஒரு பொய்யை அடிக்கடி சொன்னால் உண்மையாகிவிடும் என்பது போல் சில பௌத்த மத தேரர்கள் இவ்வாறு பொய் சொல்வதை இலங்கை முஸ்லிம்களின் சமயத்தலைவர்களின் கட்சியான உலமா கட்சி கவலையுடன் பார்க்கிறது. 

அத்துடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போதை வஸ்த்து வியாபாரத்தில் ஈடு படுகிறார் என கண்ணியத்துக்குக்குரிய பிக்கு அவர்கள் அதற்கான எந்தவொரு சாட்சியத்தையும் முன் வைக்காது பேசியுள்ளமை நிச்சயமாக பௌத்த மதம் ஏற்காத ஒன்றாகும். ஒருவரை குற்றம் சாட்டும் போது அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்;. அவ்வாறு தேரரிடம் ஆதாரம் இருந்தால் அதனை பொலிசாரிடம் ஒப்படைக்கலாம். ஆனால் இது எதனையும் செய்யாது ரிசாத் பதியுதீன் போதை வஸ்த்து வியாபாரம் செய்கிறார் என்றால் அது  இந்த அரசாங்கத்துக்கும் தெரியாமல் தேரருக்கு மட்டுமே தெரியும் என்றால் இந்த தேரரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்து போதை வஸ்த்து வியபாராம் செய்கிறாரா என கேட்க வேண்டியுள்ளது. காரணம் யாருக்கும் தெரியாத, பாராளுமன்றத்தில் கூட சொல்லப்படாத இந்த குற்றம் தேரருக்கு மட்டுமே தெரியும் என்றால் அவரும் இந்த வியாபாரத்தில் பங்காளியாக இருந்தால் மட்டுமே இது உண்மை  என அணுமானிக்க முடியும். 

ஆகவே வட மாகாண அகதி முஸ்லிம்களை மீள் குடியேற்ற முற்சிக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது எந்த ஆதாரமோ அடிப்படையோ இன்றி இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுக்ளை கண்ணியத்துக்;குரிய சில பௌத்த சமய தலைவர்கள் முன் வைப்பது பற்றி எமது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்.

2 comments:

  1. இவான் எல்லாம் ஒரு தேர

    ReplyDelete
  2. இந்த தெரர் பிரபலத்திற்காக செய்கிறாரே அன்றி இவர் ஒரு இயற்கை அன்பன் அல்ல என்பது பலருக்குத் தெரியூம்

    ReplyDelete

Powered by Blogger.