Header Ads



பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு Aids பரிசோதனை...?

பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கு முன் அனைத்து மாணவர்களையும் இரத்தப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித்த, எச்.ஐ.வி உள்ளிட்ட அனைத்து நோய்களையும் இனம்காண்பதே இதன் நோக்கம் என சுட்டிக்காட்டினார்.

தற்போது நாடு பூராகவும் 9 வயதுக்கும் குறைவான எச்.ஐ.வி பாதிப்புள்ளவர்கள் 71 பேர் இனம்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாகவும், இதனை தவிர்க்க உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் எனவும், இதனால் எச்.ஐ.வி தவிர்த்து ஏனைய நோய்கள் தொடர்பிலும் அடையாளம் காண முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இணையும் முன் அனைத்து மாணவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் அவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த நடவடிக்கை எவ்வாறு, எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து ராஜித்த எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதனை ஒரு யோசனையாகவே அவர் முன்வைத்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Yes srilankan universities are sex clubs.good
    Becoz every thing happening there openly.

    ReplyDelete
  2. அல்லாஹ் விபச்சாரத்தை ஹராமாக்கி திருமணத்தை ஹலாலாக்கி இருக்கிறான். ஆண்களுக்கு பருவமடைந்ததும் திருமணம் செய்யும் படியும், பெண்களுக்கு அவர்களின் தந்தை விரும்பிய வயதில் திருமணம் செய்யும் படியும் அல்லாஹ் அவனது வேதத்திலே ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து மக்களுக்கு சொல்லி இருக்கிறான்.

    இதனை பின்பற்றாமலுக்கு, கல்வி, காசு, பணம் என்று துன்யாவுடைய தேவைக்காக காலத்தை வீணாக செய்தால், மனிதனின் இச்சை மனிதனை ஹராமான விபச்சாரத்தில் கொண்டு சென்று விடுகிறது. ஆண்களுக்கு திருமணம் செய்ய வசதி இல்லாவிட்டால், நோன்பை நபி (ஸல்) அவர்கள் அழகிய முறையாக காட்டி சென்று உள்ளார்கள்.

    பெண்கள் எந்த வயசு என்றது அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லை, ஒரு ஆண் வந்து உங்களின் மகளை திருமணம் கேட்டால், அவன் சாளிஹானவனாக இருந்தால் மாட்டேன் என்று சொல்ல கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்து, அதனால் பித்னா உண்டாகும் என்றும் சொல்லி சென்றார்கள். இன்றைக்கு இதுவா நடக்கிறது?

    ஆண்கள் 12, 13 வயதில் அவன் பருவம் வயதை அடைகிறான், ஆனால் கல்வி, உயர் கல்வி, தொழில் என்று துன்யாட தேவைக்காக 35 வயது வரைக்கும் அல்லாஹ் ஹலாலாக்கிய, நபிக்கு பிரியமான திருமணத்தை தள்ளி போடுகிறான். இப்படியான அநியாயம் நிகழும் பொழுது எய்ட்ஸ் மட்டுமல்ல இன்னும் மோசமான நோய்களை கொண்டு அல்லாஹ் மனிதனை சோதனைக்கு உள்ளாக்கி, அவனுக்கு படிப்பினை பெற்றுக்கொள்ள சொல்கிறான்.

    ReplyDelete

Powered by Blogger.